Published : 16 Mar 2021 03:14 AM
Last Updated : 16 Mar 2021 03:14 AM
நத்தம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விஸ் வநாதன் பணப்பட் டுவாடா செய்ததாகவும், அவர் மீது நட வடிக்கை எடுக்கக்கோரியும் தேர்தல் அதிகாரிகளிடம் திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் புகார் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் போட்டியிடுகிறார். இவர் நேற்று முளையூர், புன் னபட்டி, காட்டுவேலம்பட்டி உள் ளிட்ட கிராமங்களில் பிரச்சாரம் செய்தார்.
காட்டுவேலம்பட்டி கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, அவரை வரவேற்க ஏராளமான பெண்கள் ஆரத்தித் தட்டுடன் காத்திருந்தனர். அவர்களுக்கு ஒருவர் பணப்பட்டுவாடா செய்தார். அதன் பின் ஒரு வீட்டின் முன் தொண்டர்களுடன் வாக்கு சேகரிக்கச் சென்ற அதிமுக வேட்பாளர், தனது கையிலிருந்தே பணத்தை எடுத்துக் கொடுத்தார். இந்த 2 சம்பவங்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வரு கிறது. இதையடுத்து, தேர்தல் விதிமுறைகளை மீறி நத்தம் ஆர்.விஸ்வநாதன் பணப்பட்டுவாடா செய்ததாகவும், அவர் மீது நட வடிக்கை எடுக்கக்கோரியும் தேர்தல் அதிகாரிகளிடம் திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் புகார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT