Published : 22 Nov 2015 05:39 PM
Last Updated : 22 Nov 2015 05:39 PM
எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் ராமேசுவரம் மீனவரின் மண்டை உடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குப் புறப்பட்டுச் சென்றனர். இதில் அலெக்ஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் வர்க்கீஸ், மார்டோ, முருகேசன், மாடசாமி ஆகியஆகியோரும் மீன்பிடிக்க சென்றனர்.
மீனவர்கள் கச்சத்தீவு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வலையை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த வர்க்கீஸ் என்ற மீனவர் படகிலேயே மயங்கி விழுந்தார். மற்ற 3 மீனவர்களும் காயமடைந்தனர். பின்னர் அவர்கள் அவசரமாக படகை கரைக்கு ஓட்டினர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரை திரும்பியயும் வர்கீஸை சக மீனவர்கள் ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காயம்மடைந்த மீனவர் வர்க்கீஸ்க்கு 5 தையல்கள் போடப்பட்ட்டுள்ளது. மேலும் மார்டோ, முருகேசன், மாடசாமி ஆகிய மூன்று மீனவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இலங்கை கடற்படையினரின் தாக்குதல் குறித்து கரை திரும்பிய மீனவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மீனவர்கள் கச்சத்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் படகை முதலில் கற்கள் மற்றும் பாட்டில்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். அதனை தொடர்ந்து கப்பலில் உள்ள வாட்டர் பைக் மூலம் படகிற்கு வந்து , எல்லை தாண்டி மீன்பிடிக்க வருகிறீயா என்று இரும்பு ராடால் சரமாரியாகத் தாக்கினர். இதில் வர்க்கீஸ் பலத்த காயமடைந்த படகிலேயே மயங்கி விழுந்துட்டார். மற்ற மூன்று மீனவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே உயிருக்கு பயந்து கரை திரும்பி விட்டோம், என்றனர்.
கடந்த வியாழக்கிழமை ராமேசுவரத்தை சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்பாணம் சிறையில் அடைத்துள்ள நிலையில் சனிக்கிழமை மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியிருப்பது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT