Last Updated : 15 Mar, 2021 09:47 PM

1  

Published : 15 Mar 2021 09:47 PM
Last Updated : 15 Mar 2021 09:47 PM

புதுச்சேரியில் 27 பேர் மனுதாக்கல்: ரங்கசாமி, கந்தசாமி , ஜான்குமார் சொத்து விவரம் வெளியீடு- அதிகளவில் கோடீஸ்வரர்கள்

புதுச்சேரி

புதுச்சேரியில் காங்., என்ஆர் காங்., திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் என 27 பேர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதில் முக்கிய கட்சி வேட்பாளர்கள் ரங்கசாமி, கந்தசாமி, ஜான்குமார் என பலர் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள அசையும், அசையா சொத்து மதிப்புகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்துள்ள பலரும் கோடீஸ்வரர்கள்.

அதன் விவரம்

ஜான்குமார் (பாஜக):ஜான்குமார் பெயரில் அசையா சொத்து ரூ.17 கோடியே 47 லட்சமும், அவரது மனைவி பெயரில் ரூ.6 கோடியே 58 லட்சமும் உள்ளது. இவரது பெயரில் ரூ.3.46 கோடியும், மனைவி பெயரில் ரூ.1.19 லட்சமும் வங்கி கடன் உள்ளது. ரூ.38 கோடியே 45 லட்சம் அரசுக்கு வரி பாக்கி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். வருமான வரித்துறையில் 2 வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் இரண்டு வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு வேட்பாளரான ஜான்குமார் மகன் விவியன் ரிச்சர்டு (பாஜக)- ரிச்சர்டு பெயரில் ரூ.1 லட்சத்து 56 ஆயிரமும், மனைவி பெயரில் ரூ.75 ஆயிரம் கையிருப்பு உள்ளது. அசையும் சொத்து ரூ.1 கோடியே 89 லட்சமும், மனைவி பெயரில் ரூ.2 லட்சத்து 84 ஆயிரமும், அசையா சொத்தாக ரூ.1 கோடியே 62 லட்சமும், மனைவி பெயரில் ரூ.8 லட்சத்து 25 ஆயிரமும், இவரிடம் வங்கி கடனாக ரூ.81 லட்சமும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ரங்கசாமி (என்ஆர் காங்.,): கையிருப்பில் ரூ.66 ஆயிரமும், எஸ்பிஐ வங்கியில் ரூ.5 ஆயிரமும் உள்ளது. ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள 2 ஹெமஹா பைக்கும், இரண்டு கார்களும் உள்ளன. நகை மற்றும் வங்கி இருப்பு தொகை, கார், பைக் உள்ளிட்டவற்றின் மொத்த மதிப்பு ரூ.26 லட்சத்து 22 ஆயிரம் என குறிப்பிட்டுள்ளார். மேலும், ரூ.24 கோடி மதிப்பில் விவசாய நிலமும், ரூ.7 கோடியே 62 லட்சம் மதிப்பில் விவசாயமல்லாத நிலமும் உள்ளதாகவும், குடியிருப்பு கட்டிடங்களின் மதிப்பு ரூ.38 கோடியே 13 லட்சம் எனவும் தெரிவித்துள்ளார். ராஜ்யசபா எம்பி கோகுலகிருஷ்ணனிடம் ரூ.30 லட்சம் உட்பட 7 பேரிடம் ரூ.1 கோடியே 15 லட்சம் கடன் வாங்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ரங்கசாமியிடம் மொத்தம் அசையும் சொத்து ரூ.25 லட்சத்து 91 ஆயிரமும், அசையா சொத்து ரூ.38 கோடியே 13 லட்சம் உள்ளது.

முன்னாள் அமைச்சர் கந்தசாமி (காங்.,): அசையும் சொத்தாக ரூ.11 கோடியே 22 லட்சமும், மனைவி பெயரில் ரூ.59 கோடியே 37 லட்சமும், இரு மகன்களின் பெயரில் ரூ.19 லட்சமும் உள்ளது. அசையா சொத்து கந்தசாமி பெயரில் ரூ.30 லட்சமும், மனைவி பெயரில் ரூ.5 கோடியே 76 லட்சமும், இரு மகன்கள் பெயரில் ரூ.1 கோடியே 13 லட்சத்து 50 ஆயிரமும், மனைவி பெயரில் ரூ.1 கோடி 17 லட்சம் நகை மற்றும் வீட்டு கடனும், ஒரு மகன் பெயரில் ரூ.5 லட்சம் வங்கி கடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா (திமுக): அசையும் சொத்தாக ரூ.73 லட்சத்து 67 ஆயிரமும், மனைவி பெயரில் ரூ.2 கோடியே 94 லட்சமும், அசையா சொத்தாக சிவா பெயரில் ரூ.1 கோடியே 47 லட்சமும், மனைவி பெயரில் ரூ.15 கோடியே 60 லட்சம், வங்கி கடன் ரூ.53 லட்சத்து 12 ஆயிரமும், மனைவி பெரியல் ரூ.10 லட்சத்து 37 ஆயிரமும் இருப்பதாக கூறியுள்ளார்.

அதிமுக மேற்கு மாநில செயலர் ஓம்சக்தி சேகர் (அதிமுக): அசையும் சொத்து ரூ.2 கோடி 69 லட்சமும், மனைவி பெயரில் ரூ.1 கோடியே 27 லட்சமும் உள்ளது. அசையா சொத்து ரூ.10 கோடியே 34 லட்சமும், மனைவி பெயரில் ரூ.2 கோடியே 77 லட்சமும், வங்கி கடன் 2.24 லட்சமும், மனைவி பெயரில் ரூ.12 லட்சத்து 80 ஆயிரமும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

27 பேர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் பலரும் கோடீஸ்வரர்கள் என்பது சுவாரஸ்யம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x