Published : 15 Mar 2021 01:57 PM
Last Updated : 15 Mar 2021 01:57 PM
புதிய தமிழகம் கட்சி சார்பாக 60 தொகுதிகளில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இன்று வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக கூட்டணியிலிருந்து விலகி, புதிய தமிழகம் கட்சி தனித்துக் களம் காண்பதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்தார்.
இந்நிலையில், சென்னையில் இன்று (மார்ச் 15) செய்தியாளர்களைச் சந்தித்த கிருஷ்ணசாமி, முதல் கட்டமாக 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார். அதன்படி, கிருஷ்ணசாமி, ஒட்டப்பிடாரம் தனித் தொகுதியில் போட்டியிடுகிறார். 1996-ல் அதே தொகுதியில் தனித்தும், 2011-ல் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டும் வெற்றி பெற்றவர் கிருஷ்ணசாமி.
இந்நிலையில், இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பி.மோகன், திமுக வேட்பாளர் எம்.சி.சண்முகய்யா ஆகியோரை எதிர்த்துக் களமிறங்குகிறார் கிருஷ்ணசாமி. இத்தொகுதியில் தற்போது எம்.சி.சண்முகய்யா சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.
மேலும், புதிய தமிழகத்தின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில், நாங்குநேரி - அசோக்குமர், அம்பாசமுத்திரம் - மு.சுரேந்திரன், ஆலங்குளம் - அ.உதயகுமார், தென்காசி - சந்திரன், கடையநல்லூர் - சி.பவுலின் எலிசபெத் ராணி, வாசுதேவநல்லூர் - பேச்சியம்மாள், சங்கரன்கோவில் - சுப்பிரமணியம், ராஜபாளையம் - தனுஷ்கோடி, ஸ்ரீவில்லிபுத்தூர் - சாந்தி, சாத்தூர் - கோ.மாரிகண்ணன், விருதுநகர் - குணம், திருச்சுழி - திருமுருகன், பரமக்குடி - ராஜீவ்காந்தி, ராமநாதபுரம் - விக்ரம் (எ) விக்ரமாதித்யன், முதுகுளத்தூர் - மலைசெல்வம், திருவாடானை - க.செல்வம், கன்னியாகுமரி - அ.பூமணி, காரைக்குடி - வனிதா பாலசுப்ரமணியன், மானாமதுரை - சி.ராஜய்யா, சோழவந்தான் - இந்திராணி சேதுராமன், மேலூர் - ப.பன்னீர்செல்வம், மதுரை கிழக்கு - பாலா, உசிலம்பட்டி - திருச்செல்வம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT