Published : 15 Mar 2021 12:10 PM
Last Updated : 15 Mar 2021 12:10 PM
திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மீண்டும் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அஞ்சலி செலுத்திய பின்னர் கொளத்தூரில் வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். பின்னர் திருவாரூரில் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.
இதுகுறித்து திமுக தலைமை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார். இந்தத் தொடர் பிரச்சாரத்தைத் தலைவர் ஸ்டாலின் மார்ச் 15ஆம் தேதி (இன்று) திருவாரூரில் தொடங்குகிறார்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் தலைவர் ஸ்டாலின் முதற்கட்டமாக நாளை தலைவர் கருணாநிதி பிறந்த மண் திருவாரூரில் தொடங்குகிறார்.
தலைவர் ஸ்டாலின் தேர்தல் சுற்றுப் பயண விவரம்:
நேரம் சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம்
15-3-2021, மாலை 5.30 மணி - திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம் தெற்குரத வீதி.
16-3-2021, காலை 10 மணி - அறந்தாங்கி, ஆலங்குடி, கீரமங்கலம்,
மாலை 4 மணி - வீரபாண்டி, ஏற்காடு, கஜல்நாயக்கன்பட்டி, வீரபாண்டி
மாலை 6 மணி - நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்தி-வேலூர், திருச்செங்கோடு பூங்கா சாலை.
17-3-2021, காலை 9.30 மணி - நத்தம், வேடசந்தூர். வடமதுரை, நத்தம்.
காலை 11- மதுரை,மேற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தியம், பழங்காநத்தம்.
மாலை 5.30 மணி - தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், ஸ்ரீபெரும்புதூர் சண்முகம் சாலை.
18-3-2021, காலை 10 மணி - கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர்.
மாலை 5 மணி - திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை.
மாலை 6 - புதுக்கோட்டை, விராலிமலை, கந்தர்வகோட்டை கடை வீதி.
19-3-2021, காலை 9 மணி - ஒரத்தநாடு, திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி.
மாலை 4 மணி - திருப்பூர் தெற்கு, அவினாசி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் மாநகரம். மாலை 6 மணி - கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், சூலூர்.
திமுக தலைவர் மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் பிரச்சாரத்திற்கு குறித்த நேரத்திற்குள் செல்ல வேண்டியுள்ளதால், காலத்தின் அருமை கருதி, எக்காரணம் கொண்டும் கட்சித் தோழர்கள், வழியில் வேறு எவ்வித நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டாமென கண்டிப்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT