Published : 15 Mar 2021 03:13 AM
Last Updated : 15 Mar 2021 03:13 AM

குறிஞ்சிப்பாடி வேட்பாளர் மாற்றப்பட்டதால் கடலூரில் அதிமுக மாவட்ட அலுவலகம் சூறை அமைச்சரின் பிரச்சார வாகனம் சேதம்

கடலூர் அதிமுக அலுவலகத்தில் சேதப்படுத்தப்பட்ட அமைச்சர் எம்.சி.சம்பத்தின் பிரச்சார வாகனம். அடுத்த படம்: அமைச்சர் அறையில் உள்ள கண்ணாடி மேஜை உள்ளிட்ட பொருட்கள் உடைத்து நொறுக்கப்பட்டது.

கடலூர்

கடலூரில் கூத்தப்பாக்கத்தில் உள்ள கடலூர் மத்திய மாவட்ட அதிமுக அலுவலகத்தை ஒரு கும்பல் சூறையாடியதோடு, அமைச்சரின் பிரச்சார வாகன த்தையும் அடித்து உடைத்து சேதப் படுத்தினர்.

கடலூர் தெற்கு ஒன்றியத்தின்செயலாளரான பழனிச்சாமி குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவை தொகுதி யின் வேட்பாளராக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தார். நேற்றுமாலை அவர் திடீரென மாற்றப்பட் டார். அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், ஆத்திரமடைந்த பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் நேற்று மாலை கடலூரில் கூத்தப் பாக்கத்தில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்திற்கு திரண்டுவந்தனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமைச்சர் எம்.சி. சம்பத்தின் பிரச்சார வாகனத்தைஅடித்து உடைத்து சேதப்படுத்தினர். பின்னர், அமைச்சர் அறைக்குள் நுழைந்தவர்கள் அங்கிருந்த அவரது இருக்கை, மேஜை மற் றும் நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்தினர். அதே நேரத்தில் அமைச்சரின் மகன் எஸ்.பிரவீன் கட்சி அலுவலகத்திற்குள் அமர்ந் திருந்தார். அவரையும் கும்பல் தாக்க முயற்சித்தது. உடனிருந்த கட்சிக்காரர்கள் அவரை பத்திரமாக மாடிக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பு அளித்தனர். தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் அதிமுகவினர் அங்கு திரண் டதால் தகராறில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சிய ளித்தது. இதனையடுத்து, அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இன்று (திங்கள்கிழமை) தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு அமைச்சர் திட்டமிட்டிருந்த நிலையில் அவரது பிரச்சார வாகனம் சேதப் படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x