Published : 14 Mar 2021 01:48 PM
Last Updated : 14 Mar 2021 01:48 PM
திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் தேர்தல் அறிக்கை என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கை சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் எல். முருகன் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது,
"மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று, தேர்தலை எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம். நேற்று திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. ஓவ்வொரு தேர்தல்போது திமுக ஒரு தேர்தல் அறிக்கையை சொல்வார்கள். திமுகவின் தேர்தல் அறிக்கை பொய்யும், புரட்டுமாக இருக்கிறது.
திமுக தேர்தல் அறிக்கை ஒன்றாக இருக்கும், ஆனால் ஆட்சிக்கு வந்தபின் அவற்றை எல்லாவற்றையும் மறந்துவிட்டு கொள்ளையடிப்பதைத்தான் முதன்மையாக கொண்டிருப்பார்கள். திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் தேர்தல் அறிக்கை. திருச்சி பொதுக்கூட்டத்தில் திமுக அறிவித்த திட்டங்கள் அனைத்துமே மத்திய அரசின் திட்டமே. திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழல், கட்ட பஞ்சாயத்து, நில அபகரிப்பு செய்வதைதான் முதன்மையாக செய்வார்கள்.
திமுகவின் போலியான தேர்தல் அறிக்கையை மக்கள் நம்ப தயாராக இல்லை. அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள். மீண்டும் அதிமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT