Published : 13 Mar 2021 11:46 PM
Last Updated : 13 Mar 2021 11:46 PM

போராட்டம், எதிர்ப்புகளுக்கு இடையே காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

சென்னை

போராட்டம், எதிர்ப்புகளுக்கு இடையே, முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது காங்கிரஸ்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில், நீண்ட இழுபறிக்குப் பின்னர் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. முன்னதாக, காங்கிரஸ் கட்சிக்குக் குறைவான இடங்கள் ஒதுக்கப்படுவதாகவும், திமுக காங்கிரஸ் கட்சியை நடத்தும் விதம் வருத்தத்தை அளிப்பதாகவும் கூறி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேதனையடைந்ததாக தகவல் வெளியானது.

மார்ச் 11-ம் தேதி காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளை எவை என்பது முடிவானது. அதிலும் கூட சில தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதற்கு திமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜான்சிராணி, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ஆகியோர் வெளியிட்ட ட்வீட்கள் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிக் குழப்பம் இருப்பதை உறுதிப்படுத்தியது.

மேலும், கட்சியைக் காட்டிக் கொடுத்தவர்களுக்குச் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சீட் வழங்குவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் எம்.பி. விஷ்ணு பிரசாத், சென்னை சத்தியமூர்த்தி பவனில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது மட்டுமன்றி, கூட்டணி கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடும் அதிருப்தி, போராட்டத்துக்கு இடையே காங்கிரஸ் கட்சி தங்களுடைய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. வேளச்சேரி, விளவங்கோடு, மயிலாடுதுறை, குளச்சல் ஆகிய தொகுதிகளைத் தவித்து இதர 21 தொகுதிகளின் வேட்பாளர்கள் பின்வருமாறு:

பொன்னேரி (தனி) - துரை சந்திரசேகர்

ஊத்தங்கரை - ஜே.எஸ்.ஆறுமுகம்

ஸ்ரீபெரும்புதூர் (தனி) - கே.செல்வப்பெருந்தகை

சோளிங்கர் - ஏ.எம்.முனிரத்தினம்

கள்ளக்குறிச்சி (தனி) - கே.ஐ.மணிரத்னம்

ஓமலூர் - ஆர்.மோகன் குமாரமங்கலம்

ஈரோடு கிழக்கு - திருமகன் ஈவேரா

உதகமண்டலம் - ஆர்.கணேஷ்

கோவை தெற்கு - மயூரா எஸ்.ஜெயக்குமார்

உடுமலைப்பேட்டை - கே.தென்னரசு

விருத்தாசலம் - எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன்

அறந்தாங்கி - எஸ்.டி.ராமச்சந்திரன்

காரைக்குடி - எஸ்.மாங்குடி

மேலூர் - டி.ரவிச்சந்திரன்

ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) - பி.எஸ்.டபிள்யூ மாதவராவ்

சிவகாசி - ஏ.எம்.எஸ்.ஜி.அசோகன்

திருவாடனை - ஆர்.எம்.கருமாணிக்கம்

ஸ்ரீவைகுண்டம்: ஊர்வசி எஸ்.அமிர்தராஜ்

தென்காசி - எஸ்.பழனி நாடார்

நாங்குநேரி - ரூபி ஆர்.மனோகரன்

கிளியூர் - எஸ்.ராஜேஷ்குமார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x