Published : 13 Mar 2021 02:17 PM
Last Updated : 13 Mar 2021 02:17 PM
அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 'டேப்' எனப்படும் கைக்கணினி வழங்கப்படும். மத்திய அரசுப் பள்ளிகள் உள்பட தமிழகப் பள்ளிகள் அனைத்திலும் 8-ம் வகுப்பு வரை தமிழ்ப் பாடத்தைக் கட்டாயமாக்கச் சட்டம் கொண்டு வரப்படும் என்று ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.6 அன்று நடைபெற உள்ளது. இதற்காக, அதிமுக, திமுக ஆகிய இரு முதன்மைக் கட்சிகளும் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன. திமுக போட்டியிடும் 173 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நேற்று அறிவாலயத்தில் வெளியிட்டார். இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகியுள்ளது.
இதில்,
* அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலையில் பால் வழங்கப்படும்.
* அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கைக்கணினி (டேப்) வழங்கப்படும்.
* கல்வி நிறுவனங்களில் வைஃபை வசதி செய்து தரப்படும்.
* மத்திய அரசு பள்ளிகள் உள்பட தமிழகப் பள்ளிகள் அனைத்திலும் 8-ம் வகுப்பு வரை தமிழ்ப் பாடத்தைக் கட்டாயப் பாடம் ஆக்கிட சட்டம் கொண்டு வரப்படும்.
* அரசுப் பள்ளி, கல்லூரி மாணவியர்க்கு இலவச நாப்கின் வழங்கப்படும்.
* ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT