Published : 13 Mar 2021 11:05 AM
Last Updated : 13 Mar 2021 11:05 AM

மதச்சார்பின்மை குறித்து திமுக பேசுவது வேடிக்கையாக உள்ளது: ஒவைசி குற்றச்சாட்டு

காங்கிரஸுடன் கூட்டணி வைத்து கொண்டு திமுக மதச்சார்பின்மை குறித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது என்று ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

அமமுகவின் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் தேர்தல் அறிக்கையை அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி, எஸ்டிபிஐ தேசிய துணை தலைவர் தெஹ்லான் பாகவி ஆகியோர் வெளியிட்டனர்.

இக்கூட்டத்தில், கூட்டணிக் கட்சியான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசியதாவது,

”தேசிய கட்சியான எங்களை தமிழகத்தில் கொண்டு வாருங்கள். அவ்வாறு கொண்டு வரும் போது கூட்டணியில் இருந்து காயிதே மில்லத்தின் கனவுகளை நிறைவேற்ற வலியுறுத்துவோம். அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் அண்ணா வழியில் இருந்து மாறி பிரதமர் மோடியின் வழியில் சென்று கொண்டிருக்கின்றன.

திமுகவில் சிறுபான்மையின தலைவர்களுக்கே மதிப்பில்லாத சூழல் நிலவி வருகிறது. எனவே, அந்தக் கூட்டணி வெற்றி பெற்றால் சிறுபான்மையின மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது.

மேலும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மதச்சார்ப்பின்மை குறித்து திமுக பேசுவது வேடிக்கையாக உள்ளது. தங்களை பி டீம் என்று கூறும் திமுகதான் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது. இங்கே ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக திமுகவும், காங்கிரஸும் வேஷம் போடுகின்றனர். காயிதே மில்லத் பெயரை சொல்லும் கட்சிகள் ஒரு சில சீட்டுகளுக்காக திமுகவுடன் நிற்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x