Published : 13 Mar 2021 03:12 AM
Last Updated : 13 Mar 2021 03:12 AM

அண்ணன் திமுக - தம்பி அதிமுக; ஆண்டிபட்டியில் மறுபடியும் மோதும் சகோதரர்கள்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் திமுக, அதிமுக சார்பில் உடன்பிறந்த சகோதரர்கள் எதிரெதிர் அணியில் களமிறங்குவதால் அத்தொகுதியில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஆண்டிபட்டி முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா போன்றோர் வெற்றி பெற்ற தொகுதி ஆகும்.

1977 முதல் 2019 வரை நடந்த 12 தேர்தல்களில் 9 முறை அதிமுக வென்றுள்ளது. இதனால் அதிமுகவின் நம்பிக்கைக்கு உரிய தொகுதியாக மாறியது. இந்நிலையில், கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற தங்கதமிழ்ச்செல்வன் அமமுகவில் இணைந்தார். இதனால் 2019-ம் ஆண்டு இங்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக சார்பில் மகாராஜனும், அதிமுக சார்பில் லோகிராஜனும் போட்டியிட்டனர். இருவரும் உடன்பிறந்த சகோதாரர்கள். இதனால் இத்தொகுதி மாநில அளவில் கவனம் பெற்றது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் மகாராஜன், தனது தம்பி லோகிராஜனை விட 12 ஆயிரத்து 323 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் இந்த தேர்தலிலும் இருவரும் தொகுதியில் எதிரெதிர் வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர். இதனால் தொகுதியில் தற்போதே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x