Published : 13 Mar 2021 03:12 AM
Last Updated : 13 Mar 2021 03:12 AM
மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்துள்ள சமக 40 தொகுதிகள், ஐஜேகே 20 தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டது.
மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே) கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கிறது. இரு கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகளை மக்கள் நீதி மய்யம் ஒதுக்கியது. இந்நிலையில், 40 தொகுதிகளின் பட்டியலை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் நேற்று வெளியிட்டார்.
அதன் விவரம்:
1. துறைமுகம், 2. உத்திரமேரூர், 3.அரக்கோணம் (தனி), 4. சோளிங்கர், 5. ஆற்காடு, 6. வாணியம்பாடி, 7. ஆம்பூர், 8. ஜோலார்பேட்டை, 9. போளூர், 10. உளுந்தூர்பேட்டை, 11. ரிஷிவந்தியம், 12. ஆத்தூர் (தனி), 13. சங்ககிரி, 14. திருச்செங்கோடு, 15. அந்தியூர், 16. கிருஷ்ணராயபுரம் (தனி), 17. லால்குடி, 18. கடலூர், 19. சிதம்பரம், 20. சீர்காழி (தனி), 21. திருத்துறைப்பூண்டி (தனி), 22. சிவகங்கை, 23. மதுரை தெற்கு, 24. பெரியகுளம் (தனி), 25. ராஜபாளையம், 26. விருதுநகர், 27. விளாத்திகுளம், 28. தூத்துக்குடி, 29. திருச்செந்தூர், 30. ஒட்டப்பிடாரம் (தனி), 31. வாசுதேவநல்லூர் (தனி), 32. தென்காசி, 33. ஆலங்குளம், 34. திருநெல்வேலி, 35. அம்பாசமுத்திரம், 36. நாங்குநேரி, 37. ராதாபுரம், 38. பத்மனாபபுரம், 39. விளவங்கோடு, 40. கிள்ளியூர்.
இதேபோல், ஐஜேகேவும் 40 தொகுதிகளில் முதல்கட்டமாக 20 தொகுதிகளின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து நேற்று அறிவித்தார்.
அதன் விவரம்:
1. சேப்பாக்கம், 2. செங்கல்பட்டு, 3. காட்பாடி, 4. குடியாத்தம், 5. அரூர் (தனி), 6. செங்கம் (தனி), 7. கலசப்பாக்கம், 8. மயிலம், 9. விக்கிரவாண்டி, 10. திருக்கோவிலூர், 11. சங்கராபுரம், 12. வீரபாண்டி, 13. குளித்தலை, 14. பெரம்பலூர் (தனி), 15. அரியலூர், 16. விருத்தாச்சலம், 17. புவனகிரி, 18. நன்னிலம், 19. திருவையாறு, 20. பேராவூரணி.
மீதமுள்ள 20 தொகுதிகளின் பெயர் பட்டியலும், இக்கூட்டணியில் ஐஜேகே போட்டியிடும் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களும் பின்னர் அறிவிக்கப்படும் என்று ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT