Published : 13 Mar 2021 03:14 AM
Last Updated : 13 Mar 2021 03:14 AM
திருநெல்வேலி/தூத்துக்குடி/கோவில்பட்டி/நாகர்கோவில்
திருநெல்வேலி சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிட நேற்று 2 பேர் மனுத் தாக்கல் செய்தனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளை யங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட நாம் இந்தியர் கட்சியை சேர்ந்த வணிகவியல் பட்டதாரி காமாட்சிநாதன் (51) தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதுபோல் பாஜக மாநில துணைத் தலைவர் நயினார்நாகேந்திரனும் வேட்புமனு தாக்கல் செய்தார். ராதாபுரம் தொகுதியில் மன்னார்புரத்தை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் அந்தோணி ரோசாரி (50) மனுத்தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் தொகுதி களில் போட்டியிட சுயேச்சைகள் இருவர் மனுத் தாக்கல் செய்தனர்.
கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் யூனிவர்சல் பிரதர்ஹூட் மூவ்மண்ட் அமைப்பின் தலைவர் போ.ராஜ்குமார் (37) சுயேச்சையாக போட்டியிட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரநாராயணனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதேபோல் ஓட்டப்பிடாரம் தொகுதியில் கோவை மாவட்ட தொழில் மையத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற மணியாச்சி அருகேயுள்ள மருதன்வாழ்வு கிராமத்தை சேர்ந்த குமாரவேல் என்ற வேல்முருகன் (57) என்பவர் சுயேச்சையாக போட்டியிட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வநாயகத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
தூத்துக்குடி, திருச்செந்தூர், விளாத்திகுளம், வைகுண்டம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளில் முதல் நாளான நேற்று யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதி மற்றும் கன்னியாகுமரி மக்கள வை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
முதல் நாளான நேற்று மதியம் வரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. மதியத்துக்கு பின்னர் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட சுயேச்சை வேட்பாளர் லாரன்ஸ் என்பவர் மட்டும், நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலக வளாத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் மயிலிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். பிற தொகுதிகளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
வேட்பு மனுத் தாக்கல் செய்யும் அலுவலகங்களில் வேட்பாளர் களுக்கு உதவி செய்ய உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தென்காசி தொகுதியில் நேற்று ஒருவர் கூட மனுத்தாக்கல் செய்ய வில்லை.
இன்றும், நாளையும் கிடையாது
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு இன்றும், நாளையும் வேட்புமனுத் தாக்கல் கிடையாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே, வரும் திங்கள்கிழமை முதல் வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்புமனுத் தாக்கல் வரும் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு இன்றும், நாளையும் வேட்புமனுத் தாக்கல் கிடையாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே, வரும் திங்கள்கிழமை முதல் வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்படையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT