Published : 13 Mar 2021 03:14 AM
Last Updated : 13 Mar 2021 03:14 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 7 சட்டப்பேரவை தொகுதிகளில் நேரடி போட்டியில் அதிமுக - திமுக

கோப்புப்படம்

வேலூர்/திருவண்ணாமலை

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் உள்ள 13 தொகுதிகளில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-திமுக இடையே 7 தொகுதிகளில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. தேர்தலுக்கான மனுத்தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கள் பட்டியல் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதில், அதிமுக வேட்பாளர் பட்டியல் ஏற்கெனவே வெளியான நிலையில், திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானதால் தேர்தல் களம் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது.

நேரடி போட்டி

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டப் பேரவைத் தொகுதிகளில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக 9 தொகுதி களிலும் திமுக 10 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக சோளிங்கர், ஆற்காடு, திருப்பத்தூர் தொகுதிகளிலும் கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் புரட்சி பாரதம் கட்சியும் போட்டி யிடுகிறது.

அதேபோல், திமுக 10 தொகுதிகளிலும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வாணியம் பாடியிலும், சோளிங்கர் தொகுதி யில் காங்கிரஸ் கட்சியும், அரக்கோணம் (தனி) தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் போட்டியிடுகிறது.

இதன் மூலம் ராணிப்பேட்டை, காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), ஆம்பூர், ஜோலார்பேட்டை என மொத்தம் 7 தொகுதிகளில் அதிமுக-திமுக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அதிமுக சார்பில் அமைச்சர் நிலோபர்கபீல், கே.வி.குப்பம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த லோகநாதன் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், திமுகவில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட உள்ளனர்.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த அமலு விஜயனுக்கு இந்தமுறை குடியாத்தம் (தனி) தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது.

தி.மலையில் 5 தொகுதிகள்

தி.மலை மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், 5 தொகுதிகளில் அதிமுகவும், 2 தொகுதிகளில் பாமகவும் மற்றும் ஒரு தொகுதியில் பாஜகவும் போட்டியிடுகிறது.

மேலும், 8 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. செங்கம் (தனி), கலசப்பாக்கம், போளூர், ஆரணி மற்றும் செய்யாறு ஆகிய 5 தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுக நேரடியாக மோதுகிறது.

வந்தவாசி (தனி) மற்றும் கீழ் பென்னாத்தூரில் பாமக மற்றும் திமுகவும், தி.மலையில் பாஜக மற்றும் திமுக நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x