Published : 12 Mar 2021 07:47 PM
Last Updated : 12 Mar 2021 07:47 PM
அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் 1,500 கோடி ரூபாய் அளவில், ஊழல் நடைபெற்றதாக கூறி, போரட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து, முகநூலில் காவல்துறை ஆணையருக்கு எதிராக அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கருத்து வெளியிட்டிருந்தார். இதையடுத்து, அவருக்கு எதிராக, முன்னாள் காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு ஜெயராம் வெங்கடேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (மார்ச் 12) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயராம் வெங்கடேசன் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT