அமமுக மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

டிடிவி தினகரன்: கோப்புப்படம்
டிடிவி தினகரன்: கோப்புப்படம்
Updated on
2 min read

அமமுகவின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டார்.

தமிழகத்தில் ஏப்.6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளைத் தவிர்த்து, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக எனப் பல முனைகளாக இந்தத் தேர்தலில் போட்டி நிலவுகிறது.

ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சியுடன் அமமுக கூட்டணி அமைத்துள்ளது. வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகளில் ஏஐஎம்ஐஎம் போட்டியிடுகிறது.

அதேபோன்று, அமமுக கூட்டணியில், கோகுல மக்கள் கட்சிக்கும், மருது சேனை சங்கத்துக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், அமமுக கூட்டணியில் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி, மக்களரசு கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதனிடையே, அமமுக இரண்டுகட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில், மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (மார்ச் 12) வெளியிட்டார். இப்பட்டியலில் 130 பேர் இடம்பெற்றுள்ளனர். முன்னதாக, முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் 15 பேரும், இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 50 பேரும் இடம்பெற்றிருந்தனர். இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியலின்படி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டியில் போட்டியிடுகிறார்.

இதனிடையே இன்று வெளியான மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலில், ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த ஆர்.மனோகரன், அதற்கு பதிலாக திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியல் விவரம்:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in