திமுக வேட்பாளர் பட்டியலில் எத்தனை பெண்களுக்கு இடம்?

திமுக வேட்பாளர் பட்டியலில் எத்தனை பெண்களுக்கு இடம்?
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தலை திமுக சார்பில் போட்டியிடப்படும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 12 பெண்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த வேட்பாளர்கள் பட்டியலில் 7 சதவீத அளவிற்கே பெண்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை திமுக மெகா கூட்டணி அமைத்து எதிர்கொள்கிறது. திமுகவில் மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மமக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொமதேக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களைத் தவிர்த்து திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிகள் பல உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் மொத்தம் 187 தொகுதிகளில் திமுக கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் களம் காண்கிறது.

கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் பெரும்பாலும் வெளியாகிவிட்ட நிலையில் தலைமை தாங்கும் திமுக இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 12 பெண்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எந்தெந்தப் பெண் வேட்பாளர்களுக்கு என்னென்ன தொகுதிகள்?

மதுரை மேற்கு- சின்னம்மாள்
ஆலங்குளம்- பூங்கோதை ஆலடி அருணா
தூத்துக்குடி- கீதா ஜீவன்
மானாமதுரை (தனி) - தமிழரசி
தாராபுரம் - கயல்விழி செல்வராஜ்
மொடக்குறிச்சி - சுப்புலட்சுமி ஜெகதீசன்
கிருஷ்ணராயபுரம் (தனி)- சிவகாமசுந்தரி
ஆத்தூர் - ஜீவா ஸ்டாலின்
கெங்கவல்லி (தனி)- ரேகா பிரியதர்ஷினி
திண்டிவனம் (தனி) - சீத்தாபதி சொக்கலிங்கம்
செங்கல்பட்டு- வரலட்சுமி மதுசூதன்
குடியாத்தம் - அமலு

இது திமுக களம் காணும் மொத்த வேட்பாளர்கள் (173 பேர்) பட்டியலில் 7% சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in