Published : 12 Mar 2021 12:30 PM
Last Updated : 12 Mar 2021 12:30 PM
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில் போடி தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை எதிர்த்து திமுக சார்பில் தங்கதமிழ்செல்வன் போட்டியிடுகிறார்.
கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை முடித்த நிலையில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.
திமுக கூட்டணி தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து களம் காண்கிறது. இதில் திமுக மட்டும் 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான பட்டியல் 2 நாட்களுக்கு முன்னரே வெளியாகும் என எதிர்ப்பார்த்த நிலையில் விசிக, மார்க்சிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டில் சிக்கல் ஏற்பட்டது.
நேற்று மாலை மதிமுகவும், இரவு விசிக, மார்க்சிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இறுதிப்படுத்தப்பட்டன. இதையடுத்து இன்று காலை 10-30 மணிக்கு திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தகவல் வெளியானது. பின்னர் நேரம் மாற்றப்பட்டது.
திமுக பட்டியலை வெளியிடும் முன் திமுக தலைவர் ஸ்டாலின் கோபாலபுரத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் படம் முன் பட்டியலை வைத்து ஆசி பெற்றார்.பின்னர் அண்ணா சமாதி, கருணாநிதி சமாதியில் வைத்து வணங்கினார். பின்னர் அறிவாலயம் வந்த அவர் பட்டியலை வெளியிட்டார்.
இதில் போடி தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை எதிர்த்து திமுக தலைவர் சார்பில் தங்கதமிழ்செல்வன் போட்டியிடுகிறார்.
மேலும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள முக்கிய வேட்பாளர்கள் விவரம் வருமாறு:
பத்மநாபுரம் - மனோ தங்கராஜ்
நாகர்கோவில் - சுரேஷ் ராஜன்
கன்னியாகுமரி- ஆஸ்டின்
ராதாபுரம் - அப்பாவு
அம்பாசமுத்திரம்- ஆவுடையப்பன்
நெல்லை- ஏஎல்எஸ் லட்சுமணன்
பாளையங்கோட்டை- அப்துல்வகாப்
காங்கயம் - மு.பெ.சாமிநாதன்
ஆலங்குளம்- பூங்கோதை
எடப்பாடி - சம்பத் குமார்
முதுகுளத்தூர்- ராஜ கண்ணப்பன்
உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT