Published : 12 Mar 2021 03:13 AM
Last Updated : 12 Mar 2021 03:13 AM

சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்

கோப்புப்படம்

கடலூர்

சிதம்பரம் நாட்டியாஞ்சலி டிரஸ்ட்சார்பில் 40 -ம் ஆண்டு நாட்டியாஞ் சலி விழா நேற்று முன்தினம் இரவு தெற்கு வீதியில் உள்ள வி.எஸ்.டிரஸ்ட் இடத்தில் தொடங்கியது. நிகழ்வுக்கு நாட்டியாஞ்சலி அறக் கட்டளை குழுதலைவர் டாக்டர் முத்துக்குமரன் தலைமை தாங்கி னார். செயலாளர் வழக்கறிஞர் சம்மந்தம், முன்னாள் தலைவர் வழக்கறிஞர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மங்கல இசையுடன் நிகழ்வுதொடங்கியது. இரவு 10 மணியள வில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவை தொடக்கி வைத்தார்.

அப்போது பேசிய ஆளுநர், “ஆளுநராக வந்து இந்த நாட் டிய நிகழ்ச்சியை பார்த்ததை நடராஜரின் ஆசி கிடைத்ததாகவே கருதுகிறேன். இதுபோன்ற நிகழ்ச்சிகளால் நமது பண்பாடு காப்பாற்றப்படுகிறது. உலகத்தில் சிறந்த கலாச்சாரம் நமது கலாச்சாரம் ஆகும். நாட்டை ஆள் வோருக்கு கலைகள் மீது பற்று இருக்க வேண்டும் என்பதற்காக அந்த காலத்தில் அரசவையில் இது போன்ற கலைகளை ஒரு அங்கமாகவே வைத்திருந்தனர்.

இந்நிகழ்வில் பங்கேற்கும் அனைவராலும் கலைகள் வளர வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற நிகழ்ச்சி சிறப்பாக நடத்த வேண்டும்’‘ என்றார்.

பின்னர் பல்வேறு நடன கலைஞர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். மேடையில் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற ஆச்சாள்புரம் நாதஸ்வர வித்வான் சின்னதம்பிக்கு நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மகா சிவராத்திரியான நேற்று இரவு சென்னை மேடவாக்கம் நடனப்பள்ளி மாணவிகளின் பரதமும், சென்னை நூபுரா லயா நிகழ்கலைகள் பள்ளி மாணவிகளின் பரதமும், சென்னை மிருதுளா ஸ்ரீதரனின் பரதமும், சென்னை சாய் நிருத்தியாலயா மாணவிகளின் ‘ஆறுமுகமும் அருணகிரியும்’ என்ற நட்டிய நாடகம், கொல்கத்தா மோஹூல் முகர்ஜியின் பரதம், பெங்களூரு பத்மினி எஸ். உபாத்யாவின் பரதம், கேரளா மேகா கே. பிரசாத்தின் பரதம்,புதுச்சேரி அபயகரம் கிருஷ்ணாமற்றும் ப்ரீத்தா மற்றும் மாணவர் களின் பரதம் நடைபெற்றது.

நகர முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பரத நாட்டியத்தை ரசித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x