Published : 12 Mar 2021 03:13 AM
Last Updated : 12 Mar 2021 03:13 AM
திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வாக்கு வங்கியை நம்பி இத்தேர்தலில் பாஜக களமிறங்குகிறது.
திருநெல்வேலி மாவட்டத்திலு ள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளில் திருநெல்வேலி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப் பட்டிருக்கிறது. பாஜக வேட்பா ளராக முன்னாள் அமைச்சரும், பாஜக மாநில துணைத் தலைவரு மான நயினார் நாகேந்திரன் களமிறங்குகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தேர்தல் பணிகளை அவர் தொடங்கியிருந்தார். தொகுதி ஒதுக்கீடு முடியும் முன்னரே தேர்தல் பிரச்சாரத்தை பாஜக தொடங்கியது, அதிமுக தரப்பை அதிர்ச்சி அடையச் செய்தது.
இத்தொகுதியை அதிமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என்றும், அக்கட்சி யின் மாவட்டச் செயலாளர் தச்சை என்.கணேசராஜாவை வேட்பாள ராக நிறுத்தவும் தலைமைக்கு பல்வேறு வகைகளில் அழுத்தம் தரப்பட்டது. கடைசியில் பாஜகவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டது. கணேசராஜாவை சமாதானம் செய்யும் வகையில், அவருக்கு நாங்குநேரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, நாங்குநேரி தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் நாராயணன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு ஏமாற்றம் அளித்திருக்கிறது.
திருநெல்வேலி தொகுதியில் அதிமுக வாக்கு வங்கி அதிகமுள்ள நிலையில் அத்தொகுதியை பாஜகவுக்கு தாரை வார்த்துள்ளது குறித்து அதிமுக தொண்டர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இத்தொகுதியில் கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட கே.எம்.சிவகுமார் 2,257 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். அடுத்துவந்த 2011 தேர்தலில் அக் கட்சி வேட்பாளர் ஜி.முருகதாஸ் 1,815 வாக்குகளை பெற்றிருந்தார். கடந்த 2016 தேர்தலில் அக்கட்சி வேட்பாளர் மகாராஜன் 6,017 வாக்குகளை பெற்றார். இது, அத்தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் வெறும் 3.21 சதவீதம் மட்டுமே.
நெல்லையில் கடந்த பல தேர்தல்களில் பாஜக தனித்து நின்று குறைவான வாக்குகளையே பெற்றுள்ள நிலையில், தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக வசம் சென்றுள்ளது. இத்தொகுதியில் கடந்த 2001, 2011 தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு நயினார்நாகேந்திரன் வெற்றிபெற்றிருந்தார்.
2016 தேர்தலில் திமுக வேட்பாளரைவிட 601 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றிவாய்ப்பை இவர் இழந்தி ருந்தார். நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுக வாக்கு வங்கியை நம்பி அவர் களமிறங்கு கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT