Published : 11 Mar 2021 10:31 AM
Last Updated : 11 Mar 2021 10:31 AM
இரட்டை இலக்கத்தில் பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் அமருவார்கள் என, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப். 6 அன்று நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாஜக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் நேற்று (மார்ச் 10) வெளியிடப்பட்டது. அதன்படி, 1. திருவண்ணாமலை, 2. நாகர்கோவில், 3. குளச்சல், 4. விளவங்கோடு, 5. ராமநாதபுரம், 6. மொடக்குறிச்சி, 7. துறைமுகம், 8. ஆயிரம் விளக்கு, 9. திருக்கோவிலூர், 10. திட்டக்குடி (தனி), 11. கோவை தெற்கு, 12. விருதுநகர், 13. அரவக்குறிச்சி, 14. திருவையாறு, 15. உதகமண்டலம், 16. திருநெல்வேலி, 17. தளி, 18. காரைக்குடி, 19. தாராபுரம் (தனி), 20. மதுரை வடக்கு ஆகிய 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
இந்நிலையில், சென்னை, தியாகராய நகரில், எல்.முருகன் தனியார் தொலைக்காட்சிக்கு இன்று (மார்ச் 11) பேட்டியளித்தார். அப்போது, அவர் செய்தியாளரின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
கூட்டணியில் நீங்கள் கேட்ட தொகுதிகள் கிடைத்திருக்கிறதா?
நாங்கள் கேட்ட தொகுதிகள் கிடைத்திருக்கின்றன. கூட்டணி என்று வரும்போது சில விட்டுக்கொடுத்தல் இருக்கும்.
சென்னையிலும் தொகுதிகள் வாங்கியிருக்கிறீர்கள். வேட்பாளர் தேர்வு எப்படி இருக்கும்?
கட்சியில் உரிய நபர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படும்.
தேசிய தலைவர்களின் பிரச்சாரம் வாக்குகளாக மாறுமா?
நிச்சயம் வாக்குகளாக மாறும். வளமான பூத் கமிட்டிகள் இருக்கின்றன. ஏற்கெனவே நாங்கள் கிராமம் முதல் அடித்தட்டு கிராமம் வரை சென்று சேர்ந்திருக்கிறோம். மத்திய அரசின் திட்டங்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது. வெற்றிவேல் யார்த்திரை, வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம் தமிழகம், நம்ம ஊர் பொங்கல் ஆகிய நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடத்தியிருக்கிறோம். இரட்டை இலக்கத்தில் பாஜகவின் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் அமர்ந்திருப்பார்கள்.
தேசிய தலைவர்கள் எப்போது மீண்டும் பிரச்சாரத்துக்கு வருவார்கள்?
ஏற்கெனவே பிரதமர் மோடி கோவையிலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாகர்கோவில், விழுப்புரம் ஆகிய இடங்களிலும் பிரச்சாரம் செய்திருக்கின்றனர். இன்னும் பல தேசிய தலைவர்கள் பிரச்சாரத்துக்கு வருவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT