Published : 10 Mar 2021 10:21 AM
Last Updated : 10 Mar 2021 10:21 AM

அமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்: சைதாப்பேட்டையில் செந்தமிழன், பாப்பிரெட்டிப்பட்டியில் பழனியப்பன் போட்டி

சென்னை

அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 15 பேர் கொண்ட முதற்கட்டப் பட்டியலை டிடிவி தினகரன் வெளியிட்டார். இதில் பாப்பிரெட்டிப்பட்டியில் பழனியப்பனும், சைதாப்பேட்டையில் செந்தமிழனும் போட்டியிடுகின்றனர்.

தமிழகத் தேர்தல் களத்தில் அதிமுக, திமுக தலைமையில் பெரும்பாலான கட்சிகள் இணைந்து பலமிக்க அணிகளாக எதிரெதிர் திசையில் நிற்கின்றன. மறுபுறம் அமமுக, மநீம, நாம் தமிழர் கட்சிகள் தனித்தனியே சிறு சிறு கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகின்றன. இதில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூட்டணி குறித்துப் பல கட்சிகள் பேசி வருவதாகத் தெரிவித்தார்.

ஆனால், பெரிய கட்சிகள் எதுவும் அமமுகவுடன் கூட்டணி அமைக்கவில்லை. ஒவைசியின் கட்சி தமிழகத்தில் போட்டியிட உள்ள நிலையில், அவர்கள் அமமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளனர்.

நேற்று பேட்டி அளித்த தினகரன் 10-ம் தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிடுவேன், ஆர்.கே.நகரில் நான் போட்டியிடுவேனா அல்லது வேறு யாரும் போட்டியா என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள். ஒரு தொகுதியில் போட்டியா, இரண்டு தொகுதியில் போட்டியா என்பதும் வேட்பாளர் பட்டியல் வெளிவரும்போது தெரியவரும் என்றார்.

இந்நிலையில் 15 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் குறித்து பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“அமமுக பரிசீலித்து எடுத்த முடிவின்படி, ஏப்ரல் 6 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் அமமுகவின் முதற்கட்ட அதிகாரபூர்வ வேட்பாளர்கள்.

1. ராசிபுரம் (தனி) - S.அன்பழகன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அமமுக துணைத் தலைவர்.

2. பாப்பிரெட்டிப்பட்டி - P.பழனியப்பன், முன்னாள் அமைச்சர், துணை பொதுச்செயலாளர், தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர்.

3. பாபநாசம் - M.ரெங்கசாமி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், துணை பொதுச்செயலாளர், தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர்.

4. சைதாப்பேட்டை - G.செந்தமிழன் முன்னாள் அமைச்சர், துணை பொதுச்செயலாளர் தென்சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர்.

5. ஸ்ரீரங்கம் - R.மனோகரன் முன்னாள் அரசு கொறடா, பொருளாளர், திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர்.

6. மடத்துக்குளம் - C.சண்முகவேலு, முன்னாள் அமைச்சர், அமமுக தலைமை நிலையச் செயலாளர், திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர்

7. திருப்பத்தூர் (சிவகங்கை) - K.K. உமாதேவன் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், தலைமை நிலையச் செயலாளர்.

8. சோளிங்கர் - N.G. பார்த்திபன் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், தேர்தல் பிரிவுச் செயலாளர், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர்.

9. வீரபாண்டி - வீரபாண்டி S.K. செல்வம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், அமைப்புச் செயலாளர், சேலம் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர்.

10. உசிலம்பட்டி - I.மகேந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், அமைப்புச் செயலாளர், மதுரை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர்

11. கோவை தெற்கு - R.துரைசாமி (எ) சாலஞ்சர்துரை, முன்னாள் சட்டப்பேரவஒ உறுப்பினர், அமைப்புச் செயலாளர், கோவை மேற்கு மாவட்டச் செயலாளர்

12 அரூர் - அரூர் R.R.முருகன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், அமைப்புச் செயலாளர், ஆட்சிமன்ற குழுத் தலைவர்.

13 பொள்ளாச்சி - K.சுகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர், கோவை தெற்கு மாவட்டச் செயலாளர்.

14 தருமபுரி - D.K.ராஜேந்திரன், அமைப்புச் செயலாளர், தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளர்.

15 புவனகிரி - K.S.K.பாலமுருகன், அமைப்புச் செயலாளர், கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர்.

இவ்வாறு டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x