Last Updated : 07 Mar, 2021 03:15 AM

 

Published : 07 Mar 2021 03:15 AM
Last Updated : 07 Mar 2021 03:15 AM

கடலூர் மாவட்டத்தில் 20 ஆண்டுகளில் மணமகள் பற்றாக்குறை சரியாகிவிடும்! :

பெண் சிசுவை கருவிலேயே கரு வறுக்கும் செயலில் ஈடுபடும் சம்பவங்களால் நாட்டில் 132 மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதாக கடந்த 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்தது.

அப்போதைய கணக் கெடுப்பின் படி கடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 1000 ஆணுக்கு 896 பெண் என இருந்தது. இதனை ஆராய்ந்த போது, பெண் குழந்தைகளை சிசுவிலேயே கருக்கலைப்பு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் 14 ஸ்கேன் சென்டர்கள் மூடி சீல் வைக்கப்பட்டன. ஒரு மருத்துவருக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள ஆயுள் கால தடையும் விதிக் கப்பட்டது.

தொடர்ந்து, ‘மத்திய அரசின் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டம் செயல்படுத்தப் பட்டது. பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்து கிராமப் பகுதிகளில் விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதனால், தற்போது கடலூர் மாவட்டத்தில் பெண்குழந்தைகளின் பிறப்பு விகிதம் 945 ஆக உயர்ந்துள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் பெண் களப் பணியாளர்கள் பெண் குழந்தைகளுக்காக அரசு மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்தும், மகளிரின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தன் விளைவாக பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்திருப்பதாக மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அன்பழகி தெரிவித்துள்ளார். நாளை உலக மகளிர் தினம் கொண்டாடும் இவ்வேளையில், நமது மாவட்டத்திற்கு நம்பிக்கைத் தரும் செய்தி இது. இதே நிலை தொடர்ந்தால், இன்னும் 20 ஆண்டு களில் நம் மாவட்டத்தில் தற்போது நிலவிவரும் மணமகள் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x