Published : 05 Mar 2021 06:29 PM
Last Updated : 05 Mar 2021 06:29 PM
திமுக கூட்டணியில் இழுபறி நடந்துவந்த நிலையில் முதற்கட்டமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் உடன்பாட்டை திமுக எட்டியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் இருவரும் கையெழுத்திட்டனர். எண்ணிக்கை முக்கியமல்ல லட்சியம்தான் முக்கியம் என முத்தரசன் தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் உள்ள தோழமைக்கட்சிகள் 5 ஆண்டுகளாக கூட்டியங்களாக மத்திய மாநில அரசுகளை எதிர்த்தும், மதச்சாரபற்ற கொள்கை, மக்கள் நலக்கொள்கைகளை முன் வைத்து இயக்கங்கள் நடத்தி வந்துள்ளன. சட்டப்பேரவை தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக தோழமைக்கட்சிகள் கூட்டணியில் தொகுதி குறித்து பேச்சுவார்த்தையை தொடங்கின.
இதில் திமுக குறைந்த அளவு தொகுதிகள் மட்டுமே தர முடியும் என பிடிவாதமாக நின்றதால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. காங்கிரஸ் 54 தொகுதிகள் கேட்டு பின்னர் 30 தொகுதிகள் வரை இறங்கி வந்துள்ளது. திமுக 18 தொகுதியில் நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேப்போன்று மதிமுக 12 தொகுதிகளை கேட்க 4 தொகுதியில் திமுக நிற்க 7 தொகுதிகள் வரை ஏற்றுக்கொள்ளலாம் என மதிமுக முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் 11 தொகுதிகளுக்கு மேல் நிற்க 4 என ஆரம்பித்த திமுக 6 தொகுதிகளில் வந்து நிற்பதாக தெரிகிறது. அதேப்போன்ற நிலைதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஏற்பட்டுள்ளது. 11 தொகுதிகள் கேட்ட நிலையில் 4 தொகுதியிலிருந்து ஆரம்பித்த பேச்சு வார்த்தை 6 தொகுதியில் முடிந்துள்ளது.
6 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முறைப்படி இன்று திமுகவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் முத்தரசன் இருவரும் கையெழுத்திட்டனர். ஏற்கெனவே விசிக-6, மமக-2 (1 உதயசூரியன் சின்னத்தில் போட்டி), ஐயூஎம்எல்-3 என உறுதியாகியுள்ளது.
தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்ட நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் 6 தொகுதி அல்லது 7 தொகுதிகளுடன் கூட்டணிக்குள் வரும் வாய்ப்புள்ளது. அதேப்போன்றே மதிமுகவும் 6 தொகுதிகள் அடிப்படையில் வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஒப்பந்தத்துக்குப்பின் பேசி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் “சட்டப்பேரவை பொதுத்தேர்தல்களில் இது மிக மிக முக்கியமான தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் தொகுதிகளின் எண்ணிக்கையா லட்சியமா என்றால் லட்சியத்துக்குத்தான் முதலிடம் கொடுக்கும் தேர்தல் ஆகும்”. என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT