Published : 05 Mar 2021 12:37 PM
Last Updated : 05 Mar 2021 12:37 PM
2021-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் (prelims) தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் குடிமைப் பணிகளான ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான முதல் நிலைத்தேர்வு ஆண்டுதோறும் மே மாதம் நடக்கும். நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எழுதும் தேர்வில் தேர்வாகும் தேர்வர்கள் முதன்மைத் தேர்வு (mains) எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
இதில் தேர்ச்சி அடைபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு கரோனா பாதிப்பால் இந்த ஆண்டு நடக்கவிருந்த முதல் நிலைத்தேர்வு தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு முதன்மைத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கான நேர்முகத் தேர்வும் நடக்கவில்லை.
சிவில் தேர்வு உள்ளிட்ட ஆட்சிப்பணிக்கான இந்த ஆண்டு முதன்மைத்தேர்வு, 2021-ம் ஆண்டுக்கான முதல்நிலை, முதன்மை தேர்வுகளுக்கான அட்டவணைகளை யூபிஎஸ்சி வெளியிட்டது.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 26 ஆட்சிப்பணிகளுக்கான குடிமைப்பணி (சிவில் சர்வீசஸ்) தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தத் தேர்வுகளில் முதல் நிலை தேர்வுகளை இந்தியா முழுதும் 10 லட்சம் பேர் வரை எழுதுவார்கள்.
இதில் முதல் நிலைத்தேர்வு (prelims), முதன்மை தேர்வு (mains), மற்றும் நேர்முக தேர்வு என்ற அடிப்படையில் ஆட்சிப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். ஐபிஎஸ் படிப்பவர்கள் காவல்துறைக்கும், ஐஏஎஸ் படிப்பவர்கள் நிர்வாகப்பணிக்கும், ஐஎப்எஸ் படிப்பவர்கள் வெளியுறவுத்துறைக்கும், ஐஆர்எஸ் படிப்பவர்கள் வருமான வரித்துறைக்கும் தேர்வு செய்யப்படுவர்.
இதுத்தவிர 23-க்கும் மேற்பட்ட ஆட்சிப்பணி படிப்புகளுக்கும் இது ஒன்றே தேர்வு. ஏதாவது ஒரு பட்டப்படிப்பும், பயிற்சியும் இருக்கும் யாரும் தகுந்த வயது இருக்கும் பட்சத்தில் தேர்வு எழுதலாம். 10 லட்சம் பேர் வரை எழுதும் இந்த தேர்வுகளில் இறுதியாக வருடத்திற்கு சுமார் ஆயிரம்பேர் தேர்வாகிறார்கள்.
கடந்த 2020-ம் ஆண்டுக்கான முதல் நிலைத்தேர்வுகள் கடந்த மே.31 நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கரோனா தொற்று காரணமாக மார்ச் 24 முதல் நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 2020-க்கான சிவில் சர்வீஸ் முதல் நிலைத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இறுதியாக அக்டோபர் 4 அன்று நடந்தது.
இதில் தேர்ச்சி அடைந்தவர்கள் கடந்த ஜனவரி மாதம் 8-ம் தேதி ஆரம்பித்து 9,10,16,17 என தொடர்ந்து 5 நாட்கள் முதன்மை தேர்வு எழுதினர். இவர்களில் தேர்ச்சி அடைந்தவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். இது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இதேப்போன்று 2021-ம் ஆண்டுக்கான சிவில் தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் 27 அன்று நடக்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதுகுறித்த அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில் யூபிஎஸ்ஸி சிவில் தேர்வுக்கான முதல் நிலை தேர்வு குறித்த அறிவிப்பை இந்திய தேர்வாணைய இணைச் செயலாளர் ராஜ்குமார் இன்று வெளியிட்டுள்ளார்.
712 சிவில் அதிகாரிகளை தேர்வு செய்ய 2021-ம் ஆண்டுக்கான சிவில் தேர்வுக்கான முதல்நிலைத்தேர்வு வரும் ஜூன் 27 அன்று நடக்க உள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் நடக்கும் இந்த தேர்வை ஆன்லைனில் https://upsconline.nic.in என்ற இணையத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 24 மாலை 6-00 வரை ஆகும்.
* 2021-க்கான சிவில் தேர்வில் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கான முதன்மைத் தேர்வு இந்த ஆண்டு செப். 17 வெள்ளிக்கிழமை தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது. வழக்கமாக 900-லிருந்து 1000 பேர் வரை தேர்வு செய்யப்படுவர். ஆனால் இந்த ஆண்டு 712 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேலும் விபரங்களுக்கு file:///C:/Users/50239/Downloads/5_6197332478902927919.pdf தளத்தில் சென்று அறிந்துக்கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT