Published : 05 Mar 2021 10:55 AM
Last Updated : 05 Mar 2021 10:55 AM
மாவட்டச்செயலாளர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில், சட்டப்பேரவை தேர்தலில் தொகுதி பங்கட்டில் தோழமைக்கட்சிகளுடன் ஏற்பட்ட இழுபறி, வேட்பாளர் பட்டியல் வெளியீடு தற்போதைய சூழலில் தேர்தலை எதிர்க்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
சட்டப்பேரவை வாக்குப்பதிவு ஏப்.6 அன்று நடக்க உள்ளது. மனுதாக்கல் மார்ச் 12 என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்குள் தொகுதி பங்கீடு வேட்பாளர் தேர்வை முடித்துவிட அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. தமிழகத்தில் திமுக, அதிமுக தலைமையில் மகா கூட்டணி அணிவகுத்து நிற்கிறது.
மறுபுறம் அமமுக, மநீக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் உள்ளன. திமுக கூட்டணியில் விசிக, மமக, ஐயூஎம்எல் போன்ற கட்சிகள் தவிர மற்ற கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை.
காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், மதிமுகவுடனான கூட்டணி பேச்சு வார்த்தை தொடர்ந்து இழுபறியில் உள்ளது. இந்நிலையில் தற்போதுள்ள அரசியல் சூழலில் திமுகவின் அடுத்தக்கட்ட செயல்பாடு குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
இதில் வேட்பாளர் தேர்வு, தொகுதி செல்வாக்கு, கூட்டணிக்கட்சிகள் அதிக தொகுதிகள் கேட்பது, திமுகவின் தற்போதைய நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பேசப்பட்டதாகவும், வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்தும் பேசப்பட்டதாவும் தெரிகிறது. கூட்டத்தின் முடிவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதை இறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT