Published : 05 Mar 2021 03:16 AM
Last Updated : 05 Mar 2021 03:16 AM
சட்டப்பேரவை தேர்தல் போட்டியி லிருந்து புதுச்சேரி முன்னாள் அமைச்சர்கள் விலகலால் காங் கிரஸுக்கு வழக்கமாக கை கொடுக்கும் மாஹே, ஏனாம் பிராந்தியங் களில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
புதுவை யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே,ஏனாம் ஆகிய நான்கு பிராந்தி யங்கள் உள்ளன. இதில் மாஹே, ஏனாம் பிராந்தியங்கள் வழக்கமாக காங்கிரஸுக்கு வெற்றி கனியை பெற்றுத் தரும்.
முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச் சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவர் மல்லாடிகிருஷ் ணாராவ்.
புதுவை மாநிலம் ஆந்திராவைஒட்டியுள்ள ஏனாம் பிராந்தியத்தில் இருந்து 5 முறை தொடர்ந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட் டவர். இவர், அண்மையில் தனதுஅமைச்சர் பதவியையும், எம்எல்ஏபதவியையும் ராஜினாமா செய்தார். ஏனாமில் மீண்டும் தானோ,தனது குடும்பத்தினரோ போட்டி யிடப்போவதில்லை என சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.
தொடர்ந்து இவர், ஏனாம் தொகுதியில் என்ஆர்.காங்கிரசை ஆதரிக்க முடிவு எடுத்துள்ளதால் காங்கிரஸுக்கு சிக்கல் எழுந் துள்ளது.
இதேபோல கேரளம் அருகே யுள்ள மாஹே பிராந்தியத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வல்சராஜ் தானும் வரும் தேர்தலில் போட்டியிட வில்லை என அறிவித் துள்ளார். “மாஹே தொகுதியில் மீண்டும் போட்டியிட மாட்டேன்; கட்சித்தலைமை அறிவிக்கும் வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவேன்” என்று கூறியுள்ளார்.
மாஹே தொகுதியில் 6 முறை தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வல்சராஜ். கடந்த தேர்தலில் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், இம்முறை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்த நிலையில், ‘போட்டியிட மாட்டேன்’ என்று அவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே புதுச்சேரி காங்கி ரஸில் முக்கியப் பொறுப்பில் இருந்த பலர் கட்சி மாறி உள்ளனர். அதனால் கடும் சிக்கலில் காங் கிரஸ் உள்ளது.
புதுவை மாநிலத்தில் ஏனாம்,மாஹே ஆகிய இரு பிராந்தி யங்களும் காங்கிரசுக்கு கைகொடுக்கும் முக்கியப் பகுதிகளா கும். இரு பிராந்தியத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களின் இந்த முடிவு அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கெனவே புதுச்சேரி காங்கிரஸில் முக்கியப் பொறுப்பில் இருந்த பலர் கட்சி மாறி உள்ளனர். அதனால் கடும் சிக்கலில் காங்கிரஸ் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT