Last Updated : 03 Mar, 2021 06:34 PM

3  

Published : 03 Mar 2021 06:34 PM
Last Updated : 03 Mar 2021 06:34 PM

என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணியில்தான் உள்ளது: ரங்கசாமியைச் சந்தித்த பாஜக மேலிடப் பொறுப்பாளர் தகவல்

புதுச்சேரி

என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணியில்தான் உள்ளது. தொகுதிப் பங்கீடு குறித்துத் தொடர் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என்று ரங்கசாமியைச் சந்தித்த பின்பு பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிஸ், பாஜக, அதிமுக கூட்டணி இணைந்து தேர்தலைச் சந்திக்கும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கூட்டணி குறித்து, தொகுதிப் பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வரும் சூழலில் நேற்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, தனியார் நட்சத்திர விடுதியில் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதில் கூட்டணி அல்லது தனித்துப் போட்டியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டது .

இந்நிலையில் இன்று மாலை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியைப் பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, சாரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார். 10 நிமிடம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மற்றும் நிர்மல் குமார் சுரானா வெளியே வந்தனர்,

இதுகுறித்து மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா கூறுகையில், "என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணியில்தான் உள்ளது. தொகுதிப் பங்கீடு, கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.

ஆனால் இதுபற்றி ரங்கசாமி ஏதும் பேசவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x