Published : 03 Mar 2021 03:29 AM
Last Updated : 03 Mar 2021 03:29 AM
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மக்கள் ரூ.1 லட்சம் வரை ரொக்கமாக எடுத்துச்செல்ல தடையில்லை” என்று, தென்காசி ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்ப ட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாவை தடுக்க வாகன சோதனை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் புளியரையில் கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் வாகன சோதனை பணிகளை ஆட்சியர் சமீரன் ஆய்வு செய்தார். காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உடனிருந்தார்.
செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறும்போது, “தென்காசி மாவட்டத் தில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பறக்கும்படைகள் உட்பட மொத்தம் 45 குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவரொட்டிகள் அகற்றப்பட்டு வருகின்றன. தேர்தல் பணியில் 9,400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடு கின்றனர்.
அஸாமில் இருந்து உதவி கமாண்டன்ட் தலைமையில் 82-க்கும் மேற்பட்ட எல்லை பாதுகாப்பு படையினர் காவல்துறை யுடன் இணைந்து பாதுகாப்பு பணி, வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகளின்படி 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையை வேட்பாளரோ, அரசியல் கட்சியைச் சார்ந்தவரோ கொண்டுசெல்ல முடியாது. பொதுமக்கள் ஒரு லட்சம் ரூபாய் வரை கொண்டு செல்லலாம். ஆனால், அந்த தொகைக்கான ஒப்புதல் சீட்டு, எந்த காரணத்துக்காக, எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்ற ஆவணத்தை வைத்திருக்க வேண்டும். 10 லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை எந்த வாகனத்தில் இருந்தாலும் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT