Last Updated : 08 Nov, 2015 10:06 AM

 

Published : 08 Nov 2015 10:06 AM
Last Updated : 08 Nov 2015 10:06 AM

5 லட்சம் தொழிலாளர்களை வாழவைக்கும் சிவகாசி பட்டாசு தயாரிப்பு தொழில்: சீன பட்டாசுகளை தவிர்க்க உழைப்பாளிகள் வேண்டுகோள்

ஒருநாள் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்காக ஓராண்டு முழுவதும் உழைக்கும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்வளித்து வருகிறது சிவகாசி பட்டாசுத் தொழில். இவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற சீன பட்டாசுகளை பொதுமக்கள் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் சிவ காசி மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ் வது பட்டாசு தொழில். வறட்சி, விவசாயமின்மை போன்ற காரணங் களால் இப்பகுதி மக்கள் அதிகமாக இத்தொழிலில் ஈடுபடுவதால் விருது நகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் அதிகம் தோன்றின.

விருதுநகர் மாவட்டத்தில் தற் போது மொத்தம் 767 பட்டாசு ஆலைகள் இயங்கிவருகின்றன. இந்த ஆலைகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடி யாகவும், சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின் றனர். தொடக்கத்தில் தீபாவளி, தசரா பண்டிகைகளுக்காக மட்டுமே சீசன் தொழிலாக மேற்கொள்ளப் பட்டுவந்த பட்டாசு உற்பத்தி சில ஆண்டுகளாக ஆண்டுமுழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நம் நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் 95 சதவீத தேவையை சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கிவரும் பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்கின்றன.

பண்டிகை கொண்டாடத்துக்காக ஒருநாள் நாம் வெடிக்கும் பட்டாசுக்காக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஆண்டுமுழுக்க வேலைசெய்து வருகின்றனர். பட்டாசுக்காக நாம் செலவு செய்யும் பணம் இந்தத் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் பட்டாசுத் தொழிலாளர் குடும்பத்தின் வயிற்றை நிரப்ப உதவுகிறது என்பது நிதர்சனமான உண்மை.

பட்டாசு வெடிப்பதால் சுற்றுப் புறச் சூழல் மாசுபடுவதாகக் கூறினா லும், அது ஒரு நாள் கொண்டாட் டத்தோடு முடிந்து விடுகிறது.

தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்க முன்னாள் பொதுச் செயலர் ஆசைத்தம்பி கூறும்போது:

அரசின் தொழில்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறையின் விதிமுறைகளை பின்பற்றியே பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பாக உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகி றது. விதிமுறைகளை மீறி செயல் படும் ஒருசில பட்டாசு ஆலைகளில் மட்டுமே விபத்துகள் ஏற்படுகின்றன. பட்டாசு தொழிலாளர்களுக்கு மட்டுமே தீவாவளி மற்றும் பொங் கல் பண்டிகைக்காக இரு போனஸ் வழங்கப்படுகிறது. பாதுகாப்பாக பட்டாசுத் தொழிலை மேற்கொள் வதால் கடந்த சில ஆண்டுகளில் விபத்துகளும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன என்றார்.

பட்டாசு ஆலை உரிமையாள ரும் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க முன்னாள் தலைவருமான ஏ.பி.செல்வராஜன் கூறியது:

பட்டாசுத் தொழிலை நம்பியே சிவகாசி மக்களின் வாழ்வாதாரம் உள்ளது. தொழிலாளர் துறை சார்பில் பட்டாசு ஆலை போர்மேன், மேலா ளர்களுக்கு பாதுகாப்பு குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதோடு, சிவகாசியில் உள்ள காளீஸ்வரி கலைக்கல்லூரி வளாகத்தில் பட்டாசுத் தொழிலாளர் களுக்கான சமுதாயக் கல்லூரியும் தொடங்கப்பட்டுள்ளது.

பட்டாசு நிறுவனத்தால் நடத்தப் படும் கல்லூரிகளில் பட்டாசுத் தொழிலாளர்களின் குழந்தைகள் சேர்க்கப்பட்டு குறைந்த கட்டணத்தில் கல்விபெற்று வருகின்றனர். 10க்கும் மேற்பட் டோர் மருத்துவர்களாகவும் 100-க்கும் மேற்பட்டோர் பொறியாளர்களாக வும் வளர்ந்துள்ளனர். பல நூறு பட்டதாரிகளும் உருவாக்கப்பட்டுள் ளனர்.இதில், பட்டாசுத் தொழிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாது காப்பு வழிமுறைகள், பட்டாசு மூலப்பொருள் ரசாயனங்களை கையாளும் விதம், ரசாயனக் கலவையில் ஏற்படும் வேதிமாற்றம் மற்றும் பாதுகாப்பான பட்டாசு உற்பத்தி முறைகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டு தேர்வு நடத்தி சான்றிதழும் வழங்கப்படுகிறது. பட்டாசுத் தொழிலை விபத்தில்லா பட்டாசுத் தொழிலாக கொண்டு வருவதே இதன் நோக்கம் என்றார்.

சீனப் பட்டாசை தவிர்க்க வேண்டுகோள்:

‘கள்ளத்தனமாக இந்தியாவுக்குள் கொண்டுவரப் பட்டுள்ள சீனப்பட்டாசுகள் சிவகாசி பட்டாசுத் தொழிலை அச்சுறுத்தும் அரக்கனாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் தடை செய்யப் பட்ட ரசாயனங்களைக் கொண்டு சீனப்பட்டாசுகள் உற்பத்தி செய்யப் பட்டுள்ளன. சீனப்பட்டாசுகள் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. எனவே, சீனப்பட்டாசுகள் விற்பனை செய்வதை விற்பனையாளர்களும், அதை வாங்குவதை பொதுமக்க ளும் தவிர்த்து சிவகாசி பட் டாசுத் தொழிலாளர்களுக்கு வாழ் வளிக்கவேண்டும்” என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் கேட்டுக்கொண் டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x