Published : 02 Mar 2021 03:14 AM
Last Updated : 02 Mar 2021 03:14 AM

பெண் வயிற்றில் இருந்த 18 கிலோ கட்டி அகற்றம்: பிரண்ட்லைன் மருத்துவமனை சாதனை

திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றிலிருந்து 18 கிலோ எடை கொண்ட கட்டி அகற்றப்பட்டது குறித்து விளக்கமளிக்கிறார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன். உடன் மருத்துவர்கள்.

திருச்சி

திருச்சி சிந்தாமணி பகுதியில் செயல்பட்டு வரும் பிரண்ட்லைன் மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் இருந்த 18 கிலோ எடை கொண்ட கட்டி அண்மையில் அகற்றப்பட்டது.

இதுகுறித்து பிரண்ட்லைன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் செய் தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

திருச்சியைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் 4 ஆண்டுகளாக வயிற்றில் கட்டியுடன் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்ததில் வயிற்றில் கர்ப்பப் பைக்கு அருகே பெரிய கட்டி இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, 4 மணி நேரத் துக்கும் மேலாக நடைபெற்ற அறுவை சிகிச்சையில் 18 கிலோ எடை கொண்ட கட்டி அகற்றப் பட்டது. இந்த கட்டி காரணமாக அவருக்கு சிறுநீரகப் பை, நுரையீரல், இருதயம் உள்ளிட்ட பகுதிகளில் அழுத்தம் ஏற்பட்டு அவற்றின் செயல்பாடுகள் பாதிக் கப்பட்டிருந்தன.

தற்போது கட்டி அகற்றப்பட்ட தால் அந்த பெண் இயல்பு வாழ்க் கைக்கு திரும்பி விட்டார். திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் இதுபோன்ற கட்டி அகற்றும் அறுவை சிகிச்சைகள் அடிக்கடி செய்யப்படுகின்றன. ஆனால், மிகவும் சிக்கலான அதிக எடை கொண்ட கட்டி தற்போது தான் அகற்றப்பட்டுள்ளது.

இந்தப் பெண்ணின் அனுமதி யுடன் கர்ப்பப்பையும் அகற்றப் பட்டது. கர்ப்பப்பை கட்டி, புற்றுநோய் குறித்து பெண்களிடம் விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. பெண்கள் இது தொடர்பாக பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

பேட்டியின் போது, மயக்கவி யல் மருத்துவர் ஆனந்த், புற்று நோய் சிறப்பு சிகிச்சை மருத்துவர் தாம்சன் ஜெயக்குமார் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.l

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x