Published : 01 Mar 2021 03:16 AM
Last Updated : 01 Mar 2021 03:16 AM
புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிக்காக ஜிஐசாட்-1 என்ற அதிநவீன ‘ஜியோ இமேஜிங்’ செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்தது. இதை ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் மூலம் ஹரிகோட்டாவில் உள்ளஏவுதளத்தில் இருந்து கடந்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் ஏவுதல் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து கரோனா ஊரடங்கால் கோளாறை சரிசெய்வதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் திட்டப்பணிகளை இஸ்ரோ முடுக்கிவிட்டுள்ளது.
அதன்படி ஜிஐசாட் செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் மூலம் மார்ச் இறுதியில் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். ஜிஐசாட் செயற்கைக்கோள் 2,268 கிலோ எடையுடையது. இதன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள்.
இதிலுள்ள 5 விதமான 3டிகேமராக்கள் மற்றும் தொலைநோக்கி மூலம் புவி பரப்பை துல்லியமாக படம் எடுக்கவும், பார்க்கவும் முடியும். வானிலைநிலவரங்களை தொடர்ந்து கண்காணித்து புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள இது உதவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT