Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM

ஆட்சி முடியும்போது பகட்டு அறிவிப்பால் சமூகநீதியை காக்க முடியாது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து

திமுக சார்பில் சென்னை கொட்டிவாக்கம் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ திடலில் நேற்று நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அவருக்கு சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு, சென்னை தென்மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மயிலை த.வேலு ஆகியோர் செங்கோல் வழங்கினர்.படம்: பு.க.பிரவீன்

சென்னை

ஆட்சி முடியும்போது பகட்டு அறிவிப்பு களால் சமூகநீதியை காக்க முடியாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரித்துள்ளார்.

திமுக சார்பில் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்
றார். அனைத்து மனுக்களையும் ஒரு பெட்டியில் வைத்து பூட்டி சீல் வைத்தார். இந்நிகழ்ச்சியில், சென்னை மாவட்டத்தில் வசிக்
கும் நீச்சல் வீரர், கராத்தே வீரர்,கல்வியாளர் உள்ளிட்ட 15 சாதனையாளர்களுக்கு பரிசு வழங்கி மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். மேலும், கோரிக்கை மனுக்கள் அளித்தவர்களில் 10 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்கள் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்தார். பின்னர், நிகழ்ச்சியில் திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

திமுக ஆட்சிக்கு வந்ததும் தற்போதைய ஆட்சியில் நடைபெற்ற ஒரு ஊழலை விடமாட்டேன். ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என்றுமுதல்வர் பேசியுள்ளார்.

அதிமுகவை வீழ்த்த நான் எந்த அவதாரத்தையும் எடுக்கத் தேவையில்லை. அதிமுகவை கரையானை போல முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர்ஓ.பன்னீர்செல்வமும் அரித்து கொண்டு இருக்கின்றனர். ஏற்கெனவே அதிமுக பலவீனமாகி விட்டது. எனவே, அதை வீழ்த்துவதற்கு இன்னொரு அவதாரம் தேவையில்லை.

கூட்டுறவு கடன் ரத்து, மகளிர் சுய உதவி குழு கடன் ரத்து, நகைக்கடன் ரத்து என்று நான் சொன்னேன். அதனை முதல்வர் பழனிசாமி செய்கிறார். தேர்தல் நெருங்கி வருவதால் தனக்குதோன்றுவது போல் செய்துவருகிறார். அரசியல் லாபத்துக்காக தேர்தல் நேரத்தில் பகல் வேஷம் போட்டு பகட்டு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.

பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் மத்திய அரசு பணிகளில் பெறவேண்டிய அனைத்து உரிமைகளையும் மத்திய அரசு குறைத்துவிட்டது. அதற்கு எதிராக, ஓர்அறிக்கை கூட முதல்வர் பழனிசாமி விடவில்லை. மத்திய அரசுபணி பிற்படுத்தப்பட்ட மக்களுக்குகிடைக்க முடியாத சதியை, அவரால் தடுக்க முடியவில்லை. ஆனால், இன்றைக்கு தேர்தல் காலத்தில் சமூக நீதி நாடகத்தைபோட்டுள்ளார். ஆட்சி முடியும்போது பயனற்ற அறிவிப்புகளால் சமூக நீதியை காக்க முடியாது.

திமுக ஆட்சி அமைந்ததும் அனைவருக்குமான சமூகநீதியை நிச்சயமாக வழங்குவோம். மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையில் திமுகதான் வெற்றி பெறப் போகிறது. திமுக ஆட்சி அமைந்ததும் மக்களின் கோரிக்கைகளுக்கு 100 நாட்களில் தீர்வு காண்போம்.
தமிழகம் முழுவதும் மக்கள் வழங்கி இருக்கும் மனுக்களை நிறைவேற்ற தமிழ்நாடு அரசில் தனித்துறை உருவாக்கப்படும். அந்த துறை மாவட்ட ரீதியாக மனுக்களை பரிசீலனை செய்து உடனடியாக நிறைவேற்றித் தரும். தொகுதி வாரியாக, கிராமம் வாரியாக முகாம்கள் அமைத்து பிரச்சினைகள் குறித்துநேரடியாக விசாரணை நடத்தி நிறைவேற்றி தருவோம். அதிமுகஅரசு செய்ய தவறிய கடமையைதிமுக அரசு நிச்சயம் செய்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கழக சிறுபான்மை நல உரிமைப் பிரிவுதுணை செயலர் அடையார் ஷபீல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x