Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM

அரசு கட்டிடங்கள், பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் மற்றும் பேனர்களை அகற்ற வேண்டும்: கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுரை

கடலூரில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் நடந்தது.

கடலூர்

கடலூரில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேர்தல்நடத்தை விதிகள் தொடர்பாகஅனைத்துத் துறை அலுவலர் களுடன் ஆய்வுக்கூட்டம், தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம், துணை அலுவலர்கள், பறக்கும் படையினர், நிலைகண்காணிப்பு குழுவினர்,வீடியோ கண்காணிப்பு குழுவினர் ஆகி யோருடனான ஆய்வுக்கூட்டமும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான சந்திரசேகர் சாகமூரி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள்அமலாக்கம் குறித்து விவாதிக் கப்பட்டது.

அரசு கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களிலுள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் மற்றும் பேனர்கள் அகற்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். பறக்கும் படை குழு பண நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். இது தொடர்பான புகார்கள் தரும்போது பறக்கும்படை குழுவினர் அவ்வி டத்திற்கு விரைந்திட வேண்டும். பறக்கும் படையில் உள்ள காவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் பணமோ அல்லது பிற தொடர்பான பொருட்களை பறிமுதல் செய்யலாம்.

வீடியோ கண்காணிப்புக் குழுக்கள், தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரச்சார கூட்டங்களை வீடியோவில் பதிவு செய்தல் வேண்டும்.பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப் படும் வாகனங்கள், அதில் அமைக்கப்படவுள்ள ஒலிபெருக்கிக்கு உரிய அனுமதி பெற்று பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும். உரிமம் பெறாமல் பிரச்சாரம் மேற்கொண்டால் வாக னங்களை பறிமுதல் செய்து குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்தார்.

எஸ்பி அபிநவ், மாவட்டவருவாய் அலுவலர் (பொறுப்பு) கார்த்திக்கேயன், சார் ஆட்சியர்கள் சிதம்பரம் மதுபாலன், விருத்தா சலம் பிரவின்குமார், தேர்தல் வட்டாட்சியர் பாலமுருகன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள்,துணைத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

உரிமம் பெறாமல் பிரச்சாரம் மேற்கொண்டால் வாக னங்களை பறிமுதல் செய்து குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x