Published : 27 Feb 2021 06:50 PM
Last Updated : 27 Feb 2021 06:50 PM
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி சிறுவனை கொலை செய்த வழக்கில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்றக்கோரிய மனுவுக்கு தண்டனை பெற்ற குஜராத் இளைஞர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதி கல்குவாரி கிரஷரில் வேலை செய்து வந்தவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த டானிஸ் பட்டேல் (34).
இவர், 18.12. 2019-ல் கீரனூருக்கு அருகே ஒடுக்கூருக்கு சென்றபோது 17 வயது மனநிலை பாதிக்கப்பட்ட, வாய்பேச முடியாத சிறுவனை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்ற பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சிறுவன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 18 நாட்களுக்கு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
இது தொடர்பாக கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தில் டானிஸ் பட்டேலை கைது செய்தனர்.
இந்த வழக்கில் 3 உட்பிரிவுகளில் டானிஸ் பட்டேலுக்கு 3 தூக்கு தண்டனை வழங்கி புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவை நிறைவேற்றுவது குறித்து கீரனூர் காவல் ஆய்வாளர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி கே.கல்யாணசுந்தரம், ஜி.இளங்கோவன் அமர்வு விசாரித்து, மனு குறித்து டானிஷ் பட்டேலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT