Published : 26 Feb 2021 03:15 AM
Last Updated : 26 Feb 2021 03:15 AM

மாசாணியம்மன் கோயிலில் நள்ளிரவு மயான பூஜை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மாசாணியம்மன் கோயில் மயான பூஜையில் அம்மன் உருவத்தில் இருந்து எலும்பை கவ்விய அருளாளி.

பொள்ளாச்சி

கோவை மாவட்டம் பொள்ளாச் சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம்திருவிழா கடந்த 11-ம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 27-ம் தேதி பக்தர் கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சிநடக்கிறது.

முக்கிய நிகழ்ச்சியானமயான பூஜை நேற்று முன்தினம் நள்ளிரவு ஆழியார் ஆற்றங் கரையில் உள்ள மயானத்தில் நடந்தது. மயான மண்ணால் சயன கோலத்தில் உருவாக்கப்பட்டிருந்த மாசாணி யம்மனின் உருவத்துக்கு நள்ளிரவு சிறப்பு பூஜைகள் நடை பெற்றன. பின்னர் அருளாளி அருண், தலைமை முறைதாரர் மனோகரன் உட்பட 20-க்கும் மேற்பட்ட அருளாளிகள் ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்துக்கு அம்மனின் சூலம் தாங்கி சென்றனர்.

அதிகாலை 2.30 மணிக்கு மேளதாளங்கள் முழங்கமயான மேடையில் அமைக்கப் பட்ட அம்மனின் உருவத்தை மறைத் திருந்த திரை விலக்கப்பட்டது. அருளாளி அருண் அம்மனின் மண் உருவத்தை சிதைத்து, அம்மன் மீது மறைந்து வைக்கப்பட்டிருந்த எலும்பை கவ்வியபடியே சூலாயுதத்துடன் ஆவேசமாக நடனமாடி னார். பின்னர் அம்மனின் கழுத்துப் பகுதியில் இருந்து பிடி மண் எடுக்கப்பட்டு பட்டுச்சேலையில் வைக்கப்பட்டது. மயான பூஜை அதிகாலை சுமார் 3 மணிக்கு முடிவடைந்தது.

நேற்று காலை ஆழியாறு ஆற்றங்கரையில் கோயில் தலைமை குருக்கள் கும் பஸ்தாபனம் செய்தார். 100-க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மயான பூஜையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

வரும் 26-ம் தேதி சித்திரை தேர் வடம்பிடித்தலும், இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்த்தலும், 27-ம் தேதி காலை 7.30 மணிக்கு குண்டம் இறங்குதலும் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x