Published : 25 Feb 2021 03:14 AM
Last Updated : 25 Feb 2021 03:14 AM
தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க 17.57 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய2 தடுப்பு மருந்துகள் அவசர கால பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் 160-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் மையங்களில்,முதல்கட்டமாக மருத்துவர்கள்,செவிலியர்களுக்கு தடுப்பூசிபோடப்பட்டது அடுத்தகட்டமாக காவல், உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு 28 நாட்கள் நிறைவடைந்தவர்களுக்கு இரண்டாம் தவணையாக தடுப்பூசிபோடப்படுகிறது.
இதற்கிடையே 50 வயதுக்கும்மேற்பட்டவர்கள் மற்றும் பல்வேறுநோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. எனவே, மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில், தேவையான தடுப்பு மருந்துகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பி வருகிறது.
இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகத்திடம் கேட்டபோது, “தமிழகத்துக்கு இதுவரை 14 லட்சத்து 80,500 டோஸ் கோவிஷீல்டு, 2 லட்சத்து 77,280 டோஸ் கோவேக்சின் என மொத்தம் 17 லட்சத்து57,780 டோஸ் தடுப்பு மருந்துகளைமத்திய அரசு அனுப்பியுள்ளது. இதுவரை 4.20 லட்சம் டோஸ்தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தேவையான அள வுக்கு தடுப்பு மருந்துகள் கையிருப்பில் உள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT