Published : 25 Feb 2021 03:14 AM
Last Updated : 25 Feb 2021 03:14 AM
வேளாண்மை, சுகாதாரம், தொழிலாளர் உள்ளிட்ட துறைகள் சார்பில்ரூ.150 கோடியே 71 லட்சம் மதிப்பிலான கட்டிடங்களை திறந்து வைத்தமுதல்வர் பழனிசாமி, ரூ.219 கோடியே 54 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேளாண்மைத் துறையின் கீழ்செயல்படும் வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறைசார்பில் ரூ.10 கோடியே 62 லட்சத்து50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் ரூ.78 கோடியே 52 லட்சம்மதிப்பில் அமைக்கப்பட உள்ளஉணவுப் பூங்காவுக்கும் அடிக்கல்நாட்டினார். மேலும், 2019-20 ஆண்டுக்கான எம்ஜிஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருதுக்கான முதல் பரிசை நாமக்கல்லைச் சேர்ந்தசக்திபிரகதீசுக்கும், 2-ம் பரிசை சேலத்தைச் சேர்ந்த எஸ்.வேல்முருகனுக்கும், 3-ம் பரிசை சிவகங்கையைச் சேர்ந்த உ.சிவராமனுக்கும் வழங்கினார்.
வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ரூ.1 கோடியே 90 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகத்தை முதல்வர் திறந்து வைத்து, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம், அவல்பூந்துறையில் ரூ.14 கோடியே 30 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட உள்ள அலுவலக கட்டிடத்துக்கும் அடிக்கல் நாட்டினார்.
சுகாதாரத் துறை
சுகாதாரத் துறை சார்பில் ரூ.98கோடியே 93 லட்சத்து 84 ஆயிரம்மதிப்பில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டிடங்களை முதல்வர் திறந்துவைத்தார். மேலும், திருவள்ளூர் - ஆவடி, திருப்பூர் - வேளம்பாளையம், சேலம் - அம்மாப்பேட்டை, திருநெல்வேலி - கண்டியபேரி ஆகியஇடங்களில் உள்ள 4 இரண்டாம்நிலை அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.109 கோடியே 50 லட்சம்மதிப்பில் கட்டப்பட உள்ள கூடுதல் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி னார்.
பட்டுவளர்ச்சித் துறை சார்பில் கோயம்புத்தூரில் ரூ.1 கோடியே 50 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ள பல்நிலை குளிர்பதன அலகு, தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம்சார்பில் ரூ.1 கோடியே 16 லட்சம்மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார்.
தொழிலாளர் துறை
தொழிலாளர் துறை சார்பில் ரூ.29 கோடியே 94 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்தமுதல்வர், சென்னை அண்ணாநகரில் ரூ.17 கோடியே 22 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட உள்ள தொழிலாளர் ஆணையரக வளாகத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் முதல்வர் பழனிசாமி முன்னிலையில், வங்கி நிதிச் சேவைகள் மற்றும் காப்பீடு பிரிவில் ரூ.20 கோடி மதிப்பிலான உயர் நிலை திறன் மேம்பாட்டு மையம் அமைக்க எம்எஸ்இ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்துக்கும், தமிழ்நாடுதிறன் மேம்பாட்டுக் கழகத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுதவிர, தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர் நலவாரியத்தில் பதிவுசெய்துள்ள 90 ஆயிரம் ஓட்டுநர்களின் நலனுக்காக முதல்கட்டமாக ரூ.4 கோடி மதிப்பில் 20 ஆயிரம் ஓட்டுநர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம்மதிப்பிலான சீருடை, ஷூ, முதலுதவி பெட்டி, தீயணைப்பான்கள் அடங்கிய பாதுகாப்பு பெட்டகத்தையும் முதல்வர் பழனிசாமி வழங்கினார். மேலும், குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதில் சிறப்பாக செயல்பட்ட முன்னாள் சேலம் மாவட்ட ஆட்சியர் வா.சம்பத்துக்கு பரிசுக் கேடயத்தையும் முதல்வர் வழங்கினார்.
போக்குவரத்துத் துறை
அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, வேலூர், நாமக்கல், கோவை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ரூ.5 கோடியே 59 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 10 புதிய கனரக ஓட்டுநர் பயிற்சித் தளங்கள், விருதுநகரில் ரூ.1 கோடியே 15 லட்சத்தில்கட்டப்பட்டுள்ள பணிமனை ஆகியவற்றையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், கே.பி.அன்பழகன், கே.சி.கருப்பணன், சி.விஜயபாஸ்கர், கே.டி.ராஜேந்திர பாலாஜி, கே.சி.வீரமணி, பா.பெஞ்சமின், நிலோஃபர் கபீல், எம்.ஆர்.விஜயபாஸ்கர், வி.எம்.ராஜலட்சுமி, ஜி.பாஸ்கரன், க.பாண்டியராஜன், தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் பல்வேறு துறைகளின் செயலர்கள், அதிகாரிகள் பங் கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT