Published : 25 Feb 2021 03:16 AM
Last Updated : 25 Feb 2021 03:16 AM
மன்னார்குடியில் திருமணமாகி 2 ஆண்டுகளே ஆன நிலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். விசாரணை நடத்துவதற்கு கோட்டாட்சியர் வர தாமதமானதால், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார் குடி ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகள் சரண்யா(24). சேரன்குளம் அக்ரஹாரத் தெரு வைச் சேர்ந்தவர் குருமூர்த்தி மகன் தமிழ்வேந்தன்(27). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. முதுகலை பட்டதாரிகளான இருவரும், திருமணத்துக்குப் பிறகு வெளி நாட்டில் வேலை பார்த்து வந்தனர். தற்போது, கரோனா பரவல் கார ணமாக இருவரும் சேரன்குளத் துக்கு திரும்பி, வீட்டிலிருந்தபடியே பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக சரண்யாவை தமிழ்வேந்தன் நேற்று முன்தினம் காலை மன்னார்குடி ராஜாஜி நகரில் உள்ள ரவிச்சந்திரனின் வீட்டில் கொண்டுவந்து விட்டுச் சென்றார். இதைத் தொடர்ந்து, சரண்யாவை வீட்டில் தனியாக விட்டுவிட்டு, ரவிச்சந்திரன் தனது மனைவியுடன் தஞ்சாவூருக்குச் சென்றார். பின்னர், மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, சரண்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று, சரண்யாவின் சடலத்தை மீட்டு, மன்னார்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், போலீஸார் நடத்திய விசாரணையில், சரண்யா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்தது. அந்தக் கடிதத்தில், தனது மாமியார் ஜக்கம்மா மனரீதி யாக நெருக்கடி கொடுத்ததாக எழுதப்பட்டிருந்தது. தொடர்ந்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, சரண்யாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆனதால், இதுதொடர்பாக விசா ரணை நடத்துவதற்கு கோட்டாட் சியர் வர தாமதமானது. இதனால், ஆத்திரமடைந்த சரண்யாவின் உற வினர்கள், மன்னார்குடி கோட்டாட் சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், கோட்டாட்சியர் விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால், சாலை மறியல் கைவிடப்பட்டது. பின்னர், பிரேதப் பரிசோதனை முடிந்து, சரண்யா வின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT