Published : 24 Feb 2021 04:42 PM
Last Updated : 24 Feb 2021 04:42 PM
‘இந்து தமிழ் திசை’ வெளியிட்டுள்ள டாக்டர் வி.டில்லிபாபு எழுதிய ‘போர்முனை முதல் தெருமுனை வரை’ நூல் வெளியீட்டு விழா நாளை மறுநாள் (பிப்-26, வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு இணைய வழியில் நடைபெறவுள்ளது.
தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்தின் (என்டிஆர்எஃப்) இயக்குநரான டாக்டர் வி.டில்லிபாபு, போர் விமானம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் குறித்த பல நூல்களை எழுதியுள்ளார். ‘காமதேனு’ வார இதழில் ‘போர்முனை முதல் தெருமுனை வரை’ எனும் தலைப்பில் பிரமோஸ் உள்ளிட்ட ஏவுகணைகள், பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபடும் ஹெலிகாப்டர் ஆகியவை பற்றியும், டி.ஆர்.டி,ஓ நிறுவனத்தின் அறிவியல் ஆராய்ச்சிகளால் விளைந்த பயனையும் எளிய மொழியில் விளக்கும் வகையில் டாக்டர் வி.டில்லிபாபு எழுதிய தொடர், தற்போது நூலாக வெளிவருகிறது.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் தலைமை விருந்தினராக விண்வெளி விஞ்ஞானி பத்மஸ்ரீ மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று நூலை வெளியிடுகிறார்.
சென்னை, ஆவடியிலுள்ள போர்வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் வி.பாலமுருகன், அப்துல் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் வெ.பொன்ராஜ், எழுத்தாளரும் ஐபிஎஸ் அதிகாரியுமான டாக்டர் பி.சாமூண்டேஸ்வரி ஆகியோர் பங்கேற்றுக் கருத்துரையாற்ற உள்ளனர்.
இந்த இணைய வழி நூல் வெளியீட்டு விழாவில் இணைய விரும்புபவர்கள் http://bit.ly/3s9z3GO எனும் முகநூல் இணைப்பில் அல்லது http://bit.ly/3qHDhdh எனும் யூடியூப் லிங்க்கில் இணைந்துகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT