Last Updated : 24 Feb, 2021 11:54 AM

2  

Published : 24 Feb 2021 11:54 AM
Last Updated : 24 Feb 2021 11:54 AM

தஞ்சாவூரில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்கும் போது தள்ளுமுள்ளு: அமமுக கொடியினை அதிமுகவினர் பிடுங்கியதால் மோதல்

தஞ்சாவூர்

தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷன் முன்பாக உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று 24-ம் தேதி காலை அவரது உருவ சிலைக்கு அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதற்காக ஜெயலலிதாவின் உருவ சிலை அருகே அமமுக தங்கள் கட்சி கொடியினை கட்டி இருந்தனர்.

மாலை அணிவித்த பிறகு கொடியினை அகற்ற வேண்டும் என போலீசார் தெரிவித்தனர். இதற்கு அமமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து சில நிமிடங்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

பிறகு அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இருப்பினும் அவ்விடத்தை விட்டு நகராமல் இருந்தனர்.

இந் நிலையில், அதிமுகவினர் ஊர்வலமாக வந்து ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர். அப்போது அம முக கொடி ஜெயலலிதா சிலையை சுற்றி இருந்தால் அதனை பிடுங்கி எறிந்தனர். இதற்கு. எதிர்ப்பு தெரிவித்து அமமுக வினர் அதிமுக கொடியினை அகற்றினர். இதனால் இரண்டு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதன் பிறகு அதிமுக, அமமுக கட்சியை சேர்ந்த இருவரும், ஒருவருக்கு ஒருவர் கட்சிக் கொடியின் கழற்றி கீழே எறிந்தனர். தொடர்ந்து அதிமுகவினர் ஜெயலலிதா உருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் போது, அமுகவினர் தினகரன் வாழ்க , சசிகலா வாழ்க என கோஷமிட்டு ரகளை செய்தனர்.

அதேசமயம் அதிமுகவினரும் எடப்பாடி வாழ்க ஜெயலலிதா வாழ்க்கை என கோஷமிட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x