Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில் சரியான நேரத்தில் சரியான அறிவிப்பு வரும்: பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தகவல்

நாகர்கோவில்

``பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில் சரியான நேரத்தில் சரியான அறிவிப்பு வரும்’’ என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் நாராயணசாமியின் ஆட்சி கவிழ்ந்ததற்கு காரணம் அவருடைய இயலாமை. அவர்களது எம்எல்ஏக்களால்தான் ஆட்சி கவிழ்ந்தது. இதற்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

கோவையில் நாளை (25-ம் தேதி) பிரதமர் மோடி பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். ராகுல் காந்தி செல்லும் இடமெல்லாம் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும். பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை மத்திய அரசும், தமிழக அரசும் கவனத்தில் கொண்டுள்ளன. சரியான நேரத்தில் சரியான அறிவிப்பு வரும்.

தமிழக அரசு ஏராளமான திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்தி வருகிறது. அதனை மக்களிடம் கொண்டு செல்லவே விளம்பரம் செய்யப்படுகிறது. எத்தனை இடங்களில் போட்டி என்பதை விட, எத்தனை இடங்களில் வெற்றி என்பதே பாஜகவின் நோக்கம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x