Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

பெட்ரோல், டீசல் வரியை குறைக்காதது ஏமாற்றமளிக்கிறது: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் வர்த்தக சங்கத்தினர்கள் கருத்து

மதுரை

தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப் பட்ட இடைக்கால பட்ஜெட் குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் என்.ஜெக தீசன் கூறியதாவது:

சுமார் ரூ.41 ஆயிரம் கோடி பற்றாக் குறையுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பட்ஜெட்டில் மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அறிவிப்புகள் இல்லை. ஏற்கெனவே அமல்படுத்தப் பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் அவற்றுக்கு நிதி ஒதுக்கீடு மட்டும் செய்யப்பட்டுள்ள அறிவிப் புகள்தான் நிறைந்துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது.

மத்திய பட்ஜெட் குறித்து முதல்வர் வெளியிட்டிருந்த அறிக்கையில் கோவை, மது ரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். ஆனால் தமிழக அரசின் பட்ஜெட்டில் கோவைக்கு மட்டும் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்க ரூ.6683 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்படாதது தென் தமிழக மக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி.ஜெயப்பிரகாசம் கூறிய தாவது:

விவசாயிகளை ஊக்கு விக்க ரூ.5 ஆயிரம் கோடி பயிர்க்கடன் தள்ளுபடி, பயிர் பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ.1,738.81 கோடி நிதி ஒதுக்கீடு, வேளாண்மைக்காக ரூ.11,982 கோடி நிதி ஒதுக் கீட்டை வரவேற்கிறோம். மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக ரைட்ஸ் என்ற திட்டம் உருவாக்குவதை வரவேற்கிறோம். தமி ழகத்தின் கடன் சுமை ரூ.5,70,000 கோடி என்பது மாநிலத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும். நடப்பு நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.43,170 கோடி என்பது அதிகமானால் மேலும் கடன் சுமையை உயர்த்தும். மதுரை, திருச்சி, சேலம் மெட்ரோ ரயில் திட்டம் புறக்கணிக்கப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது.

ராமநாதபுரம் வர்த்த கர்கள் சங்கத் தலைவர் பி.ஜெகதீசன்: பட்ஜெட்டில் காவல்துறை நவீனமயம், சமூக நலத்துறை, சுகாதாரம், வேளாண்மை, உயர்கல்வி, கைத்தறி தொழில்கள், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், இளைஞர் நலன், சிறு, குறு, நடுத்தர தொழில்கள், விவசாயிகளின் நலனுக்காக பயிர்க்கடன் தள்ளுபடிக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்துள்ளதற்கு பாராட்டுகிறோம். ஆனால், விலைவாசி உயர்வுக்குக் காரணமான பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க தமிழக அரசு வரியைக் குறைக்க எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன்: இடைக்கால பட்ஜெட்டில் பாராட்டுமளவுக்கு ஏதுமில்லை. மாறாக, நிதிப் பற்றாக்குறையும் மாநிலத்தின் கடன் சுமையும் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மாநில அரசு தன் பங்காக அவற்றின் மீதான விற்பனை வரியைக் குறைக்காமல் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுப்பது கண்துடைப்பு. ஆறாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு கணினி பயிற்சி பாடமாக அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x