Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM
ரேஷன் கடை ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித் துள்ளது.
இதுகுறித்து நேற்று வெளியிட்ட அர சாணையில் கூறியிருப்பதாவது:
ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஊதிய மறுசீரமைப்புக் குழு தனது பரிந்துரைகளை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடம் அளித்துள்ளது. குழுவின் பரிந்துரையால் 23,793 பணியாளர்கள் (20,448 விற்பனை யாளர்கள், 3,345 கட்டுநர்கள்) பயன்பெறு வர் என கூட்டுறவு சங்கங்களின் பதி வாளர் தெரிவித்துள்ளார். பதிவாளரின் பரிந்துரைகளை அரசு பரிசீலித்து ஊதிய உயர்வை அறிவித்துள்ளது.
ரேஷன் கடைகளில் புதிதாக நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு பணியில் சேர்ந்த ஒரு வருடம் மட்டும் தொகுப்பூதியம் வழங்கப்படும். அதன்படி, விற்பனை யாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் தொகுப்பூதியமான ரூ.5 ஆயிரம் என்பது ரூ.6,250 ஆகவும், கட்டுநர்களுக்கு ரூ.4,250-ல் இருந்து ரூ.5,500 ஆகவும் மாற்றி அமைத்து வழங்கப்படும்.
ஓராண்டு பணி முடித்த விற்பனையாளர் களுக்கு ரூ.8,600 – 29,000 எனவும், கட்டுநர் களுக்கு ரூ.7,800 – 26,000 எனவும் கால முறை ஊதியம் வழங்கப்படும். அடிப்படை ஊதியத்தில் 14 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும். ஆண்டு ஊதிய உயர்வு, 2.5 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர்த்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT