Published : 22 Nov 2015 10:11 AM
Last Updated : 22 Nov 2015 10:11 AM
தமிழகத்தில் 100 காவல்நிலையங் களில் சூரிய சக்தி மின்சாரம் தயாரிப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.
விவசாயம், வீட்டு உபயோகம், வணிக நிறுவனங்கள், கல்வி நிறு வனங்கள், தொழிற்சாலைகளுக்கு தேவையான மின்சாரத்தை சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்து கொள்வதற்கான திட்டங்களைச் செயல்படுத்த தமிழக அரசு முன் னுரிமை அளித்து வருகிறது. இவ்வசதியை ஏற்படுத்திக்கொள்ள தனிநபர், நிறுவனங்களுக்கு மானி யமும் வழங்கப்படுகிறது.
இதுஒருபுறமிக்க, தனியார் மட்டு மின்றி அனைத்து அரசு அலுவல கங்கள், அரசுப் பள்ளிகள், கல்லூரி களிலும் சூரிய சக்தி மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கான முயற்சி யும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத் திலுள்ள 100 காவல் நிலையங் களில் சூரிய சக்தி மின்சாரம் தயாரிப்பதற்கான உள்கட்டமைப்பு களை ஏற்படுத்தும் பணி தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் தற்போது தொடங்கியுள்ளது.
திருச்சி கோட்டத்துக்கு உட் பட்ட திருச்சி மாவட்டத்தில் திரு வெறும்பூர், மணப்பாறை, துறையூர், திருச்சி மாநகரில் கே.கே.நகர், உறையூர், புதுக்கோட்டை மாவட்டத் தில் மாத்தூர், கந்தர்வக்கோட்டை, கரூர் மாவட்டத்தில் லாலாப் பேட்டை, அரவக்குறிச்சி, பெரம்ப லூர் மாவட்டத்தில் குன்னம், பாடா லூர், அரியலூர் மாவட்டத்தில் விக் கிரமங்கலம், உடையார்பாளையம், தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை கிழக்கு, திருப்பனந்தாள், சுவாமி மலை, ஹரித்துவாரமங்கலம், வட்டாரத்திக்கோட்டை, திருவாரூர் மாவட்டத்தில் பேரளம், கோட்டூர், வடுவூர், நாகை மாவட்டத்தில் கீழ்வேளுர், பாளையூர், பாய்மேடு ஆகிய காவல்நிலையங்களில் அமைக்கப்பட உள்ளன.
இதேபோல, மதுரை மாவட்டத் தில் அவனியாபுரம், திருப்பரங்குன் றம், எழுமலை, பெருங்குடி, திண் டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் டவுன், தாடிக்கொம்பு, வத்தல குண்டு, தேனி மாவட்டத்தில் வருச நாடு, ஓடைப்பட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் கோவிலாங்குளம், இளஞ்செம்பூர், ராமநாதபுரம் டவுன், சிவகங்கை மாவட்டத்தில் பூலாங்குறிச்சி, திருவேங்கம்பட்டி ஆகிய காவல்நிலையங்களிலும் சூரிய சக்தி மின்சாரம் தயாரிப்ப தற்கான சாதனங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதுதவிர திருநெல்வேலி கோட் டத்தில் 12 காவல்நிலையங்கள், சேலம் கோட்டத்தில் 13 காவல் நிலையங்கள், கோவை கோட்டத் தில் 15 காவல்நிலையங்கள், விழுப் புரம் கோட்டத்தில் 11 காவல்நிலை யங்களிலும் இப்பணி மேற்கொள் ளப்பட உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் கூறும்போது, “முதல்வர் ஜெய லலிதா உத்தரவுப்படி தமிழகத்தில் சொந்தக் கட்டிடம் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலுமே சூரிய சக்தி மின்சாரம் தயாரிப்பதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளன. முதற்கட்டமாக 100 இடங் களை தேர்வு செய்து, அவை ஒவ் வொன்றிலும் தலா ரூ.3.63 லட்சம் செலவில் இதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளோம். இதற் கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டதால், அடுத்தகட்ட பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு காவல்நிலையத்தின் மாடியிலும் 6 சூரிய சக்தி உற்பத்திக் கான தகடுகள் அமைக்கப்பட உள் ளன. அவற்றிலிருந்து தயாரிக்கப் படும் மின்சாரம் தலா 100 ஏஎச், 12 வோல்ட் திறன்கொண்ட 4 பேட் டரிகளில் சேமித்து வைக்கப்படும். அத்துடன் 1.5 கிலோ வோல்ட் திறன் கொண்ட இன்வர்ட்டரும் பொருத்தப்படும்.
காவல்நிலை யத்திலுள்ள கணினிகள், மின்விசிறிகள், விளக்குகள் என அனைத்தும் சூரிய சக்தி மின்சாரத்தில் இயக் கப்படும் வகையில் மின் இணைப் புகள் ஏற்படுத்தப்படும். இதன்மூலம் மாதந்தோறும் மின்சாரத்துக்காக செலவிடப்படும் தொகையை மிச்சப்படுத்தலாம். மின்வெட்டும் இருக்காது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT