Published : 21 Feb 2021 04:33 PM
Last Updated : 21 Feb 2021 04:33 PM
சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு இந்தி பாடப்புத்தகத்தில் ஒரு குறிப்பிட்ட சாதிய அடையாளத்துடன் திருவள்ளுவரை வரைந்திருப்பது கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
CBSE எட்டாம் வகுப்பு இந்தி பாடப்புத்தகத்தில் ஒரு குறிப்பிட்ட சாதிய அடையாளத்துடன் திருவள்ளுவரை வரைந்திருப்பது கண்டனத்திற்குரியது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என உலகப் பொதுமறை தந்த வள்ளுவரை, மாணவச் செல்வங்களுக்கு இப்படி தவறாக கற்பிப்பதை ஏற்க முடியாது. (1/2)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) February 21, 2021
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‘‘சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு இந்தி பாடப்புத்தகத்தில் ஒரு குறிப்பிட்ட சாதிய அடையாளத்துடன் திருவள்ளுவரை வரைந்திருப்பது கண்டனத்திற்குரியது.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என உலகப் பொதுமறை தந்த வள்ளுவரை, மாணவச் செல்வங்களுக்கு இப்படி தவறாக கற்பிப்பதை ஏற்க முடியாது. அந்தப் படத்தை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்குவதுடன், இனி இத்தகைய தவறுகள் நிகழாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகளை CBSE மேற்கொள்ள வேண்டும். ’’
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT