Published : 21 Feb 2021 10:35 AM
Last Updated : 21 Feb 2021 10:35 AM
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியில் அனைத்து கட்சியிலும் முக்கியப் பிரமுகர்கள் போட்டியிட விரும்புவதால் இப்போதே அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், திரு வாடானை தொகுதிக்குட்பட்ட தேவி பட்டினத்தில் நவபாஷான கோயில், பிரசித்தி பெற்ற ஓரியூர் தேவாலயம், தமிழகத்தின் 2-வது பெரிய ஏரியான ஆர்.எஸ்.மங்கலம் ஏரி ஆகியவை உள்ளன.
ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி ஆகிய 2 பேரூராட்சிகளும் திருவாடானை வட்டத் தில் உள்ள அனைத்து கிராமங்களும் இந்த தொகுதியில் உள்ளன. மேலும் ராமநாதபுரம் வட்டத்தின் ஒரு பகுதியான பாண்டமங்கலம், ஆண்டிச்சியேந்தல், வெண்ணத்தூர், பத்தனேந்தல், நாரணமங்கலம், அலமனேந்தல், தேவி பட்டினம், பெருவயல், குமரியேந்தல், காவனூர், காரேந்தல், புல்லங்குடி, சித்தார்கோட்டை, அத்தியூத்து, பழங் குளம், தொருவளூர், வன்னிவயல், சூரங்கோட்டை, பட்டணம்காத்தான், திருவொத்திய கழுகூரணி, தேர்போகி, அழகன்குளம், சக்கரக்கோட்டை, கூரியூர், அச்சுந்தன் வயல், லாந்தை, பனைக்குளம், மாலங்குடி மற்றும் எக்ககுடி உள்ளிட்ட கிராமங்களும் இந்தத் தொகுதியில்தான் உள்ளன. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் இத்தொகுதிக்குள்தான் வருகிறது.
திருவாடானையை பொறுத்தவரை முக்குலத்தோர், யாதவர், முஸ்லிம், தேவேந்திரகுல வேளாளர், உடையார் உள்ளிட்ட பல சமூகத்தினரும் வசிக்கின் றனர். ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமான திருவாடானையில் விவசாயமும், மீன்பிடித் தொழிலும் பிரதானமாக உள்ளன.
திருப்பாலைக்குடி முதல் தொண்டி வரையிலான கடற்கரைப் பகுதி களில் குடிநீர் தட்டுப்பாடு தீராத பிரச்சினையாக உள்ளது. இந்த தொகுதியின் பெரும்பாலான மக்கள் ரயில் போக்குவரத்தை கண்டதில்லை. திருவாடானையில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, ஒரு தனியார் பொறியியல் கல்லூரி, மூன்று கலைக்கல்லூரிகள் மட்டுமே உள்ளன. இங்குள்ள கண்மாய்களை முழுமையாகத் தூர்வார வேண்டும், தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, தொண்டி பகுதிகளில் மீன் இறங்கு தளங்கள் அமைக்க வேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கை.
2016 சட்டப்பேரவை தேர்தலில் திருவாடானை தான் விஜபி தொகுதி யாக இருந்தது. காரணம், அ.தி.மு.க கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் நகைச்சுவை நடிகருமான கருணாஸ் இங்கு போட்டி யிட்டு வெற்றிபெற்றார்.
இங்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியன், திமுக சார்பில் சுப. தங்கவேலன் மகன் திவாகன் உள்ளிட்டோர் போட்டியிட்டாலும் 8,696 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாஸ் வெற்றிபெற்றார். இந்நிலையில், தொண்டியில் மீன்பிடித் துறைமுகம், குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு உள்ளிட்ட தான் அளித்த வாக்குறுதிகளை கருணாஸ் நிறைவேற்றவில்லை என மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கருணாஸ் கூறுகையில், மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமை யாக பூர்த்தி செய்யாததால் மீண்டும் திருவாடானையில் போட்டியிடப் போவதில்லை என்றார்.
திமுகவில் தொகுதி மக்களுக்கு அறிமுகமான ராஜகண்ணப்பன் இங்கு போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார். அதேபோல கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த சுப.த.திவாகரனும் இங்கு போட்டியிட ஆர்வமாக தலைமையிடம் காய்களை நகர்த்தி வருகிறார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சியும் இங்கு போட்டியிட விரும்புகிறது. இதற்காக அக்கட்சியில் துணை பொதுச்செயலாளர் லீமா ரோஸ் மார்டின் ஐ.ஜே.கே சார்பாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முயற்சித்து வருகிறார்.
இதேபோல, திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சியும் முஸ்லிம்களின் வாக்குகள் அதிகம் உள்ளதால் இத் தொகுதியை கேட்டுப்பெற ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் சமீபத்தில் வெளியான அதிமுக வேட்பாளர் உத் தேசப் பட்டியலில் திருவாடானை தொகுதியில் வேட்பாளராக டிபிகே. நல விரும்பி என்பவர் இடம் பெற்றுள்ளார்.
ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் அன்வர்ராஜா களமிறங்க வாய்ப்புள்ளதால், அங்கு சிட்டிங் எம்எல்ஏவான மணிகண்டன் திரு வாடானையைக் குறிவைத்துள்ளார். இப்படி அனைத்துக் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் திருவாடானையில் போட்டியிட விரும்புவதால் இத்தொகுதி விஐபி தொகுதியாகி தேர்தல் களத்தில் வெல்லப் போகிற வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பை மக்களிடம் இப்போதே ஏற்படுத்தி உள்ளது.
வாக்காளர்கள் விவரம்:
கடந்த ஜனவரி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி திருவாடனை தொகுதியில் 2,87,875 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 1 லட்சத்து 43 ஆயிரத்து 967 பேரும், பெண்கள் 1 லட்சத்து 43 ஆயிரத்து 888 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 20 பேரும் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT