Last Updated : 20 Feb, 2021 05:37 PM

 

Published : 20 Feb 2021 05:37 PM
Last Updated : 20 Feb 2021 05:37 PM

திருநெல்வேலி - கடம்பூர் இரட்டை ரயில் பாதை பணிகளால் பல்வேறு ரயில்கள் பகுதியாக ரத்து: தெற்கு ரயில்வே

திருநெல்வேலி

திருநெல்வேலி - கடம்பூர் இரட்டை ரயில் பாதை பணிகளால் பல்வேறு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி - கங்கை கொண்டான் மற்றும் கோவில்பட்டி - கடம்பூர் ரயில்பாதை பிரிவுகளில் இரட்டை ரயில் பாதை இணைப்புப்பணிகள் நடைபெற இருப்பதால், ரயில் போக்குவரத்தில் பல்வேரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி சிறப்பு ரயில்கள் (எண் 02627/02628) வரும்28-ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. வரும் பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 27 வரை சென்னையிலிருந்து புறப்படும் சென்னை - திருநெல்வேலி நெல்லை சிறப்பு ரயில் (எண் 02631)மதுரை - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வரும் 24 முதல் 28 வரை திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய திருநெல்வேலி - சென்னை நெல்லை சிறப்பு ரயில் (எண் 02632 ) திருநெல்வேலி - மதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மதுரையில் இருந்து இயக்கப்படும்.

நாகர்கோவில் - கோவை- நாகர்கோவில் பகல் நேர சிறப்பு ரயில்கள் (எண் 06321/06322) வரும் 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நாகர்கோவில் - மதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வரும் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை பெங்களூரில் இருந்து புறப்பட வேண்டிய பெங்களூர் - நாகர்கோவில் சிறப்பு ரயில் (எண் 07235 )விருதுநகர் - நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வரும் 24-ம் தேதி முதல் 28-ம் தேதிவரை நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் - பெங்களூர் சிறப்பு ரயில் (எண் 07236 ) நாகர்கோவில் - விருதுநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வரும் 26, 27, 28 ஆகிய நாட்களில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் - கோவை சிறப்பு ரயில் (எண் 02667) நாகர்கோவில் - மதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வரும் 25, 26, 27 ஆகிய நாட்களில் கோவையிலிருந்து இருந்து புறப்பட வேண்டிய கோவை- நாகர்கோவில் சிறப்பு ரயில் ( எண் 02668 )மதுரை - நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வரும் 27 அன்று மைசூரில் இருந்து புறப்பட வேண்டிய மைசூர் - தூத்துக்குடி சிறப்பு ரயில் (எண் 06236 )மற்றும் வரும் 28 அன்று தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரயில் ( எண் 06235)ஆகியவை மதுரை தூத்துக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

வரும் 25-ம் தேதி மும்பையில் இருந்து புறப்படும் தாதர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (எண் 06071 ) விருதுநகர் - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

வரும் 24, 25, 26, 28 ஆகிய நாட்களில் சென்னை எழும்பூர் குருவாயூர் சிறப்பு ரயில் (வண்டி எண் 06127) அதன் வழக்கமான பாதையான விருதுநகர், வாஞ்சி மணியாச்சி திருநெல்வேலிக்கு பதிலாக விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி பாதையில் இயக்கப்படும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x