Published : 20 Feb 2021 10:56 AM
Last Updated : 20 Feb 2021 10:56 AM

மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு: புதிய கட்டண விவரம்

சென்னை

சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். வரும் 22ம் தேதி முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நடைமுறைபடுத்தப்படவுள்ள இந்தக் கட்டணக் குறைப்பை பயன்படுத்தி, பொதுமக்கள் தங்களது பயணங்களை குறைந்த செலவில், நிறைவாக மேற்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பெருநகர சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும், மக்களின் பயண நேரத்தைக் குறைப்பதுடன், பயணம் எளிமையாகவும், வசதியாகவும் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் செயல்படுத்தப்பட்டது.

இன்று இத்திட்டத்தின் கட்டம்-1 முழுமையாக முடிக்கப்பட்டு, பல்வேறு வழித்தடப் பகுதிகளில் 54.15 கி.மீ. நீளத்திற்கு பயணிகள் சேவை சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 118.90 கி.மீ. நீளத்திலான சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-2-க்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

29.6.2015 இல் இருந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பயணிகள் சேவையை தொடக்கியது. 5 ஆண்டுகள் மெட்ரோ சேவையை வெற்றிகரமாக முடித்து, 6 ஆம் ஆண்டில் தனது சேவையைத் தொடர்கிறது. இதுவரை 7.25 கோடி பயணிகள் மெட்ரோ ரயில் சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

மெட்ரோ ரயில் சேவையை பெருவாரியான பொதுமக்கள் பயன்படுத்தும் வண்ணம், அதன் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணம்

கீழ்கண்டவாறு குறைக்கப்படும்:

இன்னும் சில சலுகைகள்; அதன் விவரங்கள்:

* க்யூ.ஆர். கோடு மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தொடுதல் இல்லா மதிப்புக் கூட்டு பயண அட்டை மூலம்
பயணிப்பவர்களுக்கு மேலும் கூடுதலாக அனைத்து பயணச் சீட்டுகளுக்கும் அடிப்படைக் கட்டணத்தில் இருந்து
20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும்.

* ஒரு நாள் வரையறுக்கப்படாத மெட்ரோ பயணம் - தற்போதுள்ள கட்டம்-ஐ இன் 45 கி.மீ வழித்தடப்பகுதிகளுக்கான கட்டணம் 100 ரூபாய் ஆகும். தற்போது துவக்கப்பட்டுள்ள வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான 9 கி.மீ. நீள கூடுதல் வழித்தடத்திற்கும் சேர்த்து மொத்தம் 54 கி.மீ வழித்தடத்திற்கும் அதே 100 ரூபாயாகவே இருக்கும்.

* ஒரு மாத வரையறுக்கப்படாத மெட்ரோ பயணம் – தற்போதுள்ள கட்டம்-ஐ இன் 45 கி.மீ வழித்தடப்பகுதிகளுக்கான கட்டணம் 2500 ரூபாய் ஆகும்.
தற்போது துவக்கப்பட்டுள்ள வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான 9 கி.மீ. நீள கூடுதல் வழித்தடத்திற்கும் சேர்த்து மொத்தம் 54 கி.மீ வழித்தடத்திற்கும் அதே 2500 ரூபாய் கட்டணம்தான்.

* ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் கட்டணத்திலிருந்து 50 சதவீத தள்ளுபடி. (வரையறுக்கப்படாத பயண
அனுமதி சீட்டுகள் மற்றும் வரையறுக்கப்பட்ட நாட்களில் செல்லுபடியாகும் அனுமதி சீட்டுகள் நீங்கலாக) இந்த ஆணை 22.2.2021 அன்று முதல்அமலுக்கு வருகின்றது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x