Published : 19 Feb 2021 06:23 PM
Last Updated : 19 Feb 2021 06:23 PM
இயந்திரக் கழிவுப் பொருட்களிலிருந்து உருவாக்கப்பட்ட கலைநயமிக்க சிற்பங்களின் கண்காட்சியை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-182, திருவான்மியூர், பாரதிதாசன் சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள இயந்திரக் கழிவுப் பொருட்களிலிருந்து உருவாக்கப்பட்ட கலைநயமிக்க சிற்பங்களின் கண்காட்சியை ஆணையர் பிரகாஷ் இன்று (19.02.2021) தொடங்கிவைத்துப் பார்வையிட்டார்.
சென்னை மாநகராட்சியில் வாகனக் கழிவுகளை மூலப்பொருட்களாகக் கொண்டு பல்வேறு கலைநயமிக்க சிற்பங்களை வடிவமைக்க உத்தேசிக்கப்பட்டு இயந்திரப் பொறியியில் துறையைச் சார்ந்த வாகனக் கழிவுகள் மற்றும் வெளிச்சந்தையில் கொள்முதல் செய்யப்பட்ட உதிரி வாகன பாகங்கள் ஆகியவற்றைக் கொண்டு நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வனவிலங்குகள், கடல்சார் உயிரினங்களை மையக் கருத்தாகக் கொண்டு 14 எண்ணிக்கையிலான சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டன.
இப்பணிக்காக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு பல்கலைக்கழகங்களின் சிற்பக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு முகாம் ஏற்படுத்தப்பட்டு ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் சிற்பங்கள் உருவாக்கப்பட்டன. இச்சிற்பக் கண்காட்சி 19.02.2021 (இன்று) முதல் 05.03.2021 வரை 15 நாட்களுக்கு திருவான்மியூர், சென்னை மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும் மற்றும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் இணை ஆணையாளர் (கல்வி) சங்கர்லால் குமாவாத், தெற்கு வட்டார துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஷ், மண்டல அலுவலர் திருமுருகன், உதவி கல்வி அலுவலர் முனியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT